பக்கம்:வெறுந்தாள்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tा. # 83 அது 'வெறுந்தாள்’ என்று குப்பையில் போட்டு வைத் தேன். அதில் சமூகப் பிரச்சனை அடங்கி இருக்க வேண்டும் சமூக உணர்வைத் தட்டி எழுப்பும் கதையாக அமைய வில்லை. இது இப்பொழுது பிரசுரிக்க முடியாத வெறுந் தாளாகத் தான் நின்றுவிட்டது. 'சிரிப்பு' என்பது ஒர் அவல உணர்வைத் தீட்டும் அழகிய கதை. அது இன்றைய மணமாகாத கன்னிகளின் சோக வாழ்வைத் தீட்டும் அதி அற்புதமான கதையாகப் பட்டது. பெண் இன்று புதுமைக்கும் பழமைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறாள். அவள் ஆடவர் களைப் போலப் படிக்க, தொழில் செய்ய உரிமை பெற்று இருக்கிறாள். ஆனால் வாழ உரிமை பெறவில்லை. உழைக்கத்தான் வழி பிறந்திருக்கிறது. அவள் தன் விருப்பப் படி ஒருவனைத் தேடிப் பெறும் உரிமையைப் பெற வில்லை. அந்த உரிமையைக் கொடுத்தாலும் அந்தச் சுமையைப் பெற்றோர்களுக்குத் தள்ளிவிடுகிறார்கள். அவள் குடும்பப் பெண்ணாகவே தன்னை நினைக்க வேண்டி இருக்கிறது. சமூக உணர்வு அவளுக்கு முழுவதும் மறுக்கப்படுகிறது. அவள் ஆடவரிடமிருந்து முற்றிலும் பிரிக்கப்படுகிறாள். இது அவளை முன்னுக்குச் செல்ல விடாமல் தடுக்க வழியாக அமைகிறது. அவள் தன் வாழ்வைத் தானே அமைத்திருக்க முடியும். தன் மண வாழ் விற்குப் பெற்றோர்களை நம்புகிறாள். அதனால் அவள் தன் வாழ்வுப் பாதையை அமைத்துக் கொள்ளத் தவறிவிட்டாள். இதை ஒரு நாவலாகவே எழுதியிருக்கலாம். என்பது சரசுவின் கருத்து, அதை அவள் எழுத விரும்பினாள். ஆனால் அதன் கரு அவளுக்குச் சொந்தமில்லை. அவ்வாறு பிறர் கருவை வைத்து எழுதுவது கலைப்படைப்பு ஆகாது என்பது அவளுக்குத் தெரியும். அதை அவள் தன் வாழ்வில் கண்டிருக்க வேண்டும். அந்தச் சோகம் அவளைத் தொட் டிருக்க வேண்டும். அவளைத் தொட்டதில்லை; அதனால் அதை எழுத அவள் விரும்பவில்லை. அவளுக்குப் பிடித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/84&oldid=914595" இலிருந்து மீள்விக்கப்பட்டது