பக்கம்:வெறுந்தாள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வெறுந்தாள் கதை 'ஆசை, அன்பு, பாசம்'தான். அது தன் சொந்தக் கதை போல அவளுக்கு இருந்தது. இந்த மூன்றிலும் அவள் முழு வெற்றியைக் காணவில்லை. எங்கள் பேச்சில் ஒரு தத்துவத்தைப் படைத்தோம். மனிதன் சந்தோஷமாக வாழ வேண்டும். எது சந்தோஷத் தைக் கெடுக்கிறதோ அது தவிர்க்கப்பட வேண்டும். இது புதிய தத்துவம். இதை வைத்து எழுதுவது தான் எனக்கும் பிடித்து இருந்தது. இது விவாதிக்கப்பட வேண்டிய விஷ யம். சந்தர்ப்பவாதிகளின் தத்துவத்துக்கும் இலக்கியவாதி யாகிய நான் புகுத்தும் தத்துவத்துக்கும் வித்தியாசம் இருக் காமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது. இதைத் தலைப்பாக வைத்து ஒர் இலக்கியச் சிறுகதைப் போட்டி வைக்கலாம் என்று எங்கள் வட்டத்தில் தீர்மானம் செய்தோம். 'கவலை ஒரு நோய்' என்ற தலைப்பைத் தந்து வைத்தோம். அது அவசியம் என்றும் வாதிடலாம். அது கூடாது என்றும் வாதிடலாம். அதற்கு ஒரு வாய்ப்புத் தருவது என்பது எங்கள் திட்டம். பத்திரிகையில் இது புது அம்சமாக இடம் பெற வேண்டும் என்று பேசி முடித்தோம். 'வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தலைப்பைக் கொடுத்து ஒரு தொடர் கதை எழுதச் சொல்லி விளம்பரம் தந்தோம். இந்தத் தத்துவத்தை எப்படி விமரிசிக்கிறார்கள் என்பதைக் காண விரும்புகிறோம். இது என் தத்துவம், இதை வைத்து ஒரு நாவல் எழுதுவது என்று தீர்மானித் தேன். வாழ்வைக் கண்டு அஞ்சி ஒடுபவன் கோழை; போராடி வெற்றி பெறவேண்டும். சமுதாய நினைப்பு' என்ற நனவோட்டத்தில் வாழ வேண்டும்; வாழ்க்கைக்கு அஞ்சி வெறுப்பது தவறு என்பது என் கொள்கை. தவறுக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொள்பவனைவிடத் தவறு செய்துவிட்டு அது நியாயம் என்று சொல்லுகின்ற முற் போக்கு வாதியைத்தான் என் எழுத்துப் படைத்துத் தரும். சமுதாயம் சிந்திக்கட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/85&oldid=914596" இலிருந்து மீள்விக்கப்பட்டது