பக்கம்:வெறுந்தாள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

пп. ? 89 நிறுவனங்களில் வேலை செய்யும் எந்தத் தொழி லாளியும் தனித்தன்மையோடு இயங்க முடியாது. அந்த வகையில் எங்கள் பத்திரிகைத் தொழிலும் அப்படித்தான். 'வாசகர்களைத் திருப்திப் படுத்துவது' என்பது அவசியம் ஆகிறது. எங்கள் விருப்பம்போல் எதையும் எழுத முடி யாது. சமுதாயச் சிந்தனையோடு ஒட்டி இயங்கினால்தான் அதற்கு வரவேற்பு ஏற்படுகிறது. இதிலே இருந்து மாறி நான் வெளியில் வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அது முடியவில்லை. பத்திரிகையின் உதவி இல்லாமல் எந்த எழுத்தாளனும் முன்னுக்கு வரமுடியாது. தனித்துவம் மிக்க எழுத்தாளனைப் பத்திரிகை ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு வகையில் இயங்கிக் கொண்டு வருகிறது. அது அதன் பாணி என்று கூறுவர். அந்தப் பாணியை உருவாக்குவதும் அதன் வாசகர் தான். அந்தப் போக்குக்கு இதை எழுதாவிட்டால் அவன் எழுத்து அந்த வாசகர்களிடையே எடுபடாது. அவர்கள் விரும்பும் விஷயங்களைத்தான் எழுத வேண்டும். சமு தாயத்தை மாற்ற முயல்க கூடாது. மாற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் பத்திரிகை எழுத்து செய்யும். எங்கள் வாசகர்களை மகிழ்விக்க வேண்டும். எதிர் பாராத முடிவுகள். திடீர்த் திருப்பங்கள், காதல் கட்டங்கள், சஸ்பென்ஸ், அடுத்த இதழில் அவர்கள் எதிர்பார்க்கும் நிலையில் சம்பவங்களைக் கொண்டு செல்வது இந்த உத்திகளை எடுத்தாள வேண்டும். இந்தப் போக்கு எனக்கு வரவரப் பிடிக்கவில்லை. நான் முழு எழுத்தாளனாக என் தனித்தன்மையோடு வெளி வர வேண்டும். என்று போராடிக் கொண்டிருக்கிறேன். இது என் உள் மனப் போராட்டம். ஞானம் அஞ்சுகிறாள். பத்திரிகையை விடக்கூடாது என்கிறாள். அதிலே இருக்கிற நிம்மதி வேறு எதிலும் இல்லை. என்கிறாள். மாதச் சம்பளம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/90&oldid=914602" இலிருந்து மீள்விக்கப்பட்டது