பக்கம்:வெறுந்தாள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வெறுந்தாள் தூண்டும் என்று நினைக்கிறேன். 'படித்த பெண்தான் பயப் படுவாள். அவளுக்குத்தான் எது நல்லது எது கெட்டது என்பது தெரியும். Boy friend டோடு பழகலாம், பேசலாம். ஆனால் அவனோடு திரைப் படத்திற்கு உடன் போவதற்கு அஞ்சுகிறாள்! அவள் அஞ்சக் கூடாது' என்கிறாள். அதை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்றாலும் படித்த பெண்ணைப் பற்றி அழகான சொல் ஒவியத்தை அவள் தந்திருக்கிறாள். இன்று படித்த பெண்கள் அஞ்சித்தான் வாழ வேண்டி யிருக்கிறது. படிக்க, அறிவை வளர்த்துக் கொள்ள, சரிநகர்ச் சமானமாக வாழ உரிமை கொடுத்துள்ள சமுதாயம் அவர் களுக்கு நிகராகத் தவறு செய்ய உரிமை கொடுக்கவில்லை. அதனால் விளையும் பிரச்சனைகளை அவர்களால் ஏற்றுச் சமாளிக்க முடியாது. அதனால்தான் அஞ்சுகிறார்கள். இந்த அச்சம் அவசியமாகிறது. தற்காப்புக்காகச் சமுதாயம் அவர் களை அஞ்ச வைக்கிறது. இது இன்றைய நிலைமை. அவர்கள் துணிவு பெற்றுவிட்டால் நாளைய சமுதாயம் அஞ்சும் நிலை வந்துவிடும். வரத்தான் போகிறது. அவள் அவ்வாறு தன் நண்பனோடு திரைப் படத்திற்குப் போவது தவறு இல்லை என்று சமுதாயம் உணரத்தான் போகிறது. சரசுவதி போன்றவர்களின் சிந்தனையால்தான் அத்தகைய நிலை உருவாக வேண்டும். கற்பு என்பதைப் பற்றி பயங்கரமான கற்பனைகள் இந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அன்று ஒரு பாட்டும் விளக்கமும்' என்ற பகுதியில் ஒரு சிறு இலக்கிய நிகழ்ச்சி தரப்பட்டிருந்தது. அது பிரசுரத்திற்கு என்று அனுப்பியிருந்தார்கள். அது பழைய இலக்கியப் பாட்டு. அதனை விமரிசித்துப் பாராட்டி எழுதி இருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டு இலக்கியப் பேராசிரியர் களுக்கு இந்தப் பண்பாட்டுச் சித்திரம்தான் விமர்சனத்திற்குக் கிடைத்திருக்கிறது. ஏதோ ஒரு நூலில் இருந்து எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/93&oldid=914605" இலிருந்து மீள்விக்கப்பட்டது