பக்கம்:வெறுந்தாள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 வெறுந்தாள் கிறது. இளமையைக் குறிப்பிட்டால் அவள் உணர்வு தூண்டப்படுகிறது. அழகைப் பாராட்டினால் அது அவ ளுக்குப் பெருமையைச் சேர்க்கிறது. அழகை ரசிப்பது இயற்கை, கற்பு என்ற போர்வை போட்டு அதை இலக்கியம் முடிவைக்க நினைக்கிறது. அந்தப் பாட்டையும், விமர்சனத்தையும் சரஸ்வதி ஏற்க மறுத்துவிட்டாள். 'இன்று பெண்கள் ஆடைகளைக் குறைத்துக் கொள்கிறார்கள். உடம்பு தெரிய உடுத்துகிறார் கள்' இது இன்று விமர்சிக்கப்படும் செய்தி. இரண்டாவது பரிசு பெற்ற துணுக்காக ஒரு பத்திரிகை வெளியிட்டிருக் கிறது. "அவள் ஆபீஸுக்குப் போகப் புறப்படுகிறாள். ஏதோ மறந்துவிட்டதாக அவளுக்கு நினைப்பு, தன் சிநேகிதி யிடம் இதைக் கூறுகிறாள். அதாவது அவள் ஜாக் கெட்டைப் போட மறந்துவிட்டாள்; என்பது அந்தக் கேலிச் சித்திரம். இன்றைய கார்ட்டுன் நாளை வாழ்க்கையாக மாறி னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று பெண்கள் தம் அழகைப் பலரும் ரசிக்க இடம் தருகிறார்கள். இது இன்றைய போக்கு என்கிறாள் சரசுவதி. 'பெண் தன் அழகால் பிறரை மயக்கக் கூடாது. மகிழ் விக்கலாம்' என்பது சரசுவதியின் சித்தாந்தம். 'அழகு மனிதர்களின் மனத்தைத் தூய்மைப்படுத்து கிறது. அவர்களின் தவறான எண்ணங்களை ஒழிக்கிறது” என்பது அவள் விளக்கம். 'அந்தப் பழைய பாட்டும் விமர்சனமும் ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறிவிட்டாள். "தோட்டத்துப் பூ உரியவர்க்குத்தான் சொந்தம்; இல்லையென்று மறுக்கவில்லை. அதைப் பறிப்பதற்கு மற்றவர்களுக்குச் சொந்தமில்லை. பார்ப்பதற்குக் கூடவா தடை' இது வானம்பாடியின் வாதம். அவன் எப்போதும் எதையும் உருவகத்தில்தான் விளக்குவான். இந்த இருபதாம் நூற்றாண்டுப் போக்கை அறிய நிச்சயம் எனக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெறுந்தாள்.pdf/95&oldid=914607" இலிருந்து மீள்விக்கப்பட்டது