பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

ஜேம்ஸ் ஆலன்


இரக்கச் சிந்தையும் கொண்ட மனிதன், மிகுதியான திறமையிருப்பினும் இரக்கம் அற்றவனாயிருக்கின்ற மனிதனை முந்திவிடுவான்.

ஒரு மனிதன் ஓர் அமைச்சராக இருப்பினும், ஒரு சமயவாணனாக இருப்பினும் அவரிடமிருந்து வெளிப்படுகின்ற கொடுமையான சிரிப்பும், அன்பில்லா மொழியும் அவனுடைய புகழையும், செல்வாக்கையும் மிகவும் ஊறுபடுத்திவிடும். குறிப்பாக அவனுடைய செல்வாக்கையே பெரிதும் பாதிக்கும். ஏனெனின், அவனுடைய நல்லியல்புகளைப் பாராட்டுவோர்கூட, அவன் அன்பில்லாதிருத்தலைக் கண்டு, தமது சொந்த மதிப்பீட்டில் தம்மை அறியாமலே அவனைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

இரக்கம் விலங்குகளும் உட்பட அனைவரும் இயல்பாகவே புரிந்து போற்றுகின்ற உலகின் இயல்பான பண்பாகும். மனிதர் முதல் உயிரினங்கள் அனைத்தும் துன்பத்திற்குட்படுவனவே. துன்பகரமான பட்டறிவின் ஒருமைப்பாடு இரக்கம் என்னும் உணர்ச்சியை உண்டுபண்ணுகின்றது.

தன்னலம் பிறருடைய பொறுப்பில் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள மனிதரைத் துண்டுகின்றது. ஆனால், இரக்கம் தன்னல ஈகத்தால் பிறரைக் காப்பாற்ற அவர்களைத் தூண்டுகின்றது. இத் தன்னலத் ஈகத்தில் உண்மையான, முடிந்த முடியவான இழப்பு எதுவுமே இல்லை. ஏனெனின், தன்னல மகிழ்ச்சிகள் சிறியதும், ஒரு சிலவாகவுமிருக்க, இரக்கத்தின் நன்மைகள், பெரியவும்