பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 106


மறப்பவனுமான பேராசை கொண்ட மனிதன் கீழ் மண்டிப் போகின்றவனே ஆவான்.

பேராசை, இழிபோக்கு, பொறாமை, ஐயப்பாடு இவற்றிற்கெதிராக மனிதன் எச்சரிப்புடனிருக்கட்டும். ஏனெனில், இவை வளர இடந் தந்தால், அவனுடைய வாழ்வில் சிறப்புடையனவாக இருப்பவை அனைத்தையும் இவை பறித்துவிடும். பருப்பொருளியலான காரியங்களில் சிறப்படையனவாக இருப்பன அனைத்தையும் அழிக்கும். அதேபோன்று குணவியல்பினும், மகிழ்ச்சியிலும் சிறப்புடையனவாக இருப்பவை அனைத்தையும் கூட இவை பறித்துவிடும்.

அவன் தாராளமான நெஞ்சமும், வாரி வழங்கும் கையும், பெருந்தன்மையும், பிறரை நம்பும் பான்மையும் உடையவனாக, மகிழ்ச்சியுடன் வழங்குவது, அதுவும் பெரும்பாலும் தனது உடைமையிலிருந்தே வழங்குவது மட்டுமன்றி, தனது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் கருத்திலும், செயலிலும் தன்னுரிமை வழங்குபவனாகவும் இருக்கட்டும்; அவ்வாறிருப்பின், நண்பரும் விருந்தினரும்போல, புகழும், செழிப்பும், ஆக்கம் ‘நுழையட்டுமா’ என அவன் கதவைத் தட்டி நிற்கும்.

பண்புடைமை தெய்வத் தன்மையுடன் உறவு கொண்டதாகும். கரடுமுரடான, கொடுமை மிகுந்த, தன்னல நோக்குடைய இருப்பவை அனைத்தினின்றும் பண்புடைமையைப் போன்ற வேறு எக் குணமும் அதிகத் தொலைவில் இருக்காது. எனவே, ஒருவன் பண்புடைமையுடையவனாகும்போது அவன் தெய்வீகத்