பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 118


கிடையாது; மூலாதாரம் கிடையாது; மெய்ம்மை கிடையாது. அங்கு எப்பொருளும் நிலைகொள்ள எதுவுமே கிடையாது; ஆனால், அங்குத் தனிமை, ஏழைமை, அவமானம், குழப்பம், அச்சங்கள், ஐயப்பாடுகள், ஏக்கங்கள், பிற அனைத்தையும்விட இழிந்த, இருண்ட, அற்பமான ஒரு நரகம் உண்டெனின், அது இயல்பார்வமின்மை என்னும் நரகமேயாகும்.

இயல்பார்வமுடைய மனிதனின் மனத்தை அழகான நான்கு சிறப்புக் குணங்கள் அணி செய்கின்றன. அவை

1. எளிமை 3. மதி நுட்பம்
2. கவர்ச்சி 4. ஆற்றல்

ளிமையென்பது இயல்தன்மையே, அது, பொய்த் தோற்றமோ அயலான அலங்காரமோ இன்றி வெறுமனே உள்ளவாறிருத்தலேயாகும். இயற்கையின் கண்ணுள்ள பொருள்கள அனைத்தும் அழகுடையன வாயிருப்பதேன்? அவை இயற்கையாயிருப்பவை. அவற்றை நாம் அவையிருக்கின்றபடியே காண்கின்றோ மேயன்றி, அவை விரும்பக்கூடும் வகையில் காண்பதில்லை. ஏன், உண்மையில் பிற இருப்பதினின்றும் மாறுபட்டுத் தோற்றமளிக்கவேண்டுமென்ற விருப்பம் அவற்றிற்குக் கிடையாது.

மனித இனத்தின் வெளிப்புறத்து இயலுலகில் கபடம் எங்ஙணுமில்லை. கண்கள் அனைத்திற்கும் அத்துணை அழகாகத்தோன்றுகின்ற மலர் பாசாங்கு செய்யக் கூடுமெனின் அது தன் அழகை இழந்துவிடும்.