பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 128


முடிவே உண்மை, பிற அனைத்தும் பொய் என அவன் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுவிட்டான். ஆனால், அவன் தன் வழக்கையே வாதாடுவதுடன், வெற்றிக்காகவும் பாடுபடுகின்றான். மேலும், அவன் நிகழ்ச்சிகளை அமைதியுடன் வரிசைப்படுத்தித் தான் கூறுவது உண்மை என்பதை விளக்கிக் காட்ட முயற்சி எடுத்துக் கொள்வதுமில்லை. ஆனால், மிகுதியாகவோ குறைவாகவோ கடுப்பும், கலக்கமும் கொண்டு தனது கூற்றையே வாதிடுகின்றான்.

புத்தொளி உள்ளே புகுவது, மிகுதியான அழகைக் கண்ணுறுவது, மேலான இசையைச் செவிமடுப்பது ஆகிய இவற்றிற்கெதிராக மனக் கதவை மூடி விடுவதே தப்பெண்ணமாகும். ஒருதலைச் சார்பினன் தனது சிறிய நிலையற்ற உறுதியற்ற கருத்தை விடாமல் பற்றிக் கொண்டு அதுவே உலகின் மிகப்பெரிய காரியமென எண்ணுகின்றான். தன்னுடைய சொல்லை மனிதர் அனைவரும் சரியென ஒப்புக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு அவன் தன் சொந்தத் தீர்மானத்தின் மீது அத்துணை பற்றுக் கொண்டவனாக இருக்கின்றான். அவன் காணுகின்றபடியே தாமும் காணாத மனிதரை அவன் ஏறத்தாழ அறிவிலிகளாகவே கருதுகின்றான். அதே வேளையில், தன் நோக்கத்தைப் பொறுத்துத் தன்னோடு ஒன்று சேருவோரின் நல்ல தீர்மானத்தை அவன் புகழுகின்றான். அத்தகைய மனிதன் அறிவும் பெறவியலாது. உண்மையும் பெறவியலாது, மெய்ம்மையின் எல்லைக்குட்படாத கருத்னெனும் கோளத்திற்குள் அடைபட்டவனாக இருக்கின்றான். வாழ்வின் எளிய