பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

ஜேம்ஸ் ஆலன்


ஊழை வழிப்படுத்துவதிலும் அவன் மிக மேன்மையான நிலையை வகிக்கப்போவதை உறுதியாகக் கொள்கின்ற அளவிற்குத் தப்பெண்ணத்திலிருந்து விடுபடுதல் அத்துணை அரிதாகும். அந்நிலை உலகியல் சார்ந்த காரியங்களில் ஒரு பதவியைப் பெறுவதாயிருக்க வேண்டுமென்பதில்லை. ஏனெனின், அது நிகழ்தற்கரிதானது. ஆனால், அந் நிலை செல்வாக்கில் ஒரு மேம்பட்ட நிலையைப் பெறுவதேயாகும். இப்போது அத்தகைய ஒருவன் இருக்கலாம். அவன் ஒரு தச்சனாக இருக்கலாம், ஒரு நெசவாளியாக இருக்கலாம், ஒரு கணக்கராக இருக்கலாம், அவன் ஏழையிலிருக்கலாம், பெருஞ் செல்வரின் வீட்டிலே இருக்கலாம்; அவன் குட்டையாகவோ நெட்டையாகவோ இருக்கலாம். எந்நிறமும் உடையவனாக இருக்கலாம்; ஆனால், எந்நிலையிலிருப்பினும், அவன் உலகத்தை இயக்கத் தொடங்கிவிட்டவனாவான். அவன் ஒருநாள் வளர்ச்சியின் ஒரு புது ஆற்றலாகவும், படைப்பு மையமாகவும் உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்படுவான்.

எல்லையற்ற பரம்பெருள் இக் கோளத்தின்கண் ஒரு சிந்தனையாளனைக் கட்ட விழ்த்து விடுகையில் கவனமாக இருங்கள் என எமர்சன் கூறுகின்றார். தப்பெண்ணத்தால் கட்டுண்ட மனிதன் சிந்தனையாளனல்லன்; அவன் வெறுமனே ஒரு கருத்தை விடாப்பிடியுடன் கொண்டிருப்பவனேயாவான். ஒவ்வோர் எண்ணமும் அவனுடைய குறிப்பிட்ட தப்பெண்ணம் என்னும் வாயிலைக் கடந்து வந்து அதன் நிறத்தைப் பெற்றேயாக வேண்டும். எனவே, உணர்ச்சி வயப்படாத சிந்தனையும்,