பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

ஜேம்ஸ் ஆலன்


பொறுமையின் அழகான படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்க வேண்டும். அவன் பிறரைக் குறித்துச் சிந்திக்கவும், தனக்காக மட்டுமன்றி, அவர்களுடைய நன்மைக்காகவும் செயல்படக் கற்றுக் கொள்ளவேண்டும். பிறர்நலம் கருதுவோனாக, பொறுமையுடையவனாக இருக்க வேண்டும். மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று தாம் கருதுகின்ற காரியங்களில், தம்மிலிருந்து மாறுபட்ட கருத்துடைய மனிதருடன் அமைதியான நெஞ்சத்தைக் கொண்டிருத்தல் எவ்வாறு என்பதை அவன் கற்குக் கொள்ள வேண்டும். உயிருக்கு இடையூறு விளைவிக்கக் கூடிய நஞ்சைப் பருகுவதை அவன் தவிர்ப்பது போன்று, சண்டையிடுதலையும் அவன் தவிர்க்க வேண்டும். பொறுமையைக் கையாளுவதன் மூலம் வணக்கத்தைக் கொணருதல் எவ்வாறு என்பதையும் அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

சச்சரவு சாதாரணமானது. அஃது நெஞ்சத்தைத் துன்புறுத்தி மனத்தைச் சிதறடித்து விடுகின்றது. பொறுமை மிகவும் அரிதானது; அஃது நெஞ்சத்திற்கு வளமூட்டி, மனத்தை அழகு செய்கின்றது. கரடுமுரடான பாறையை மெதுவான நீர்தேய்த்துக் கரைத்து விடுதல் போன்று, எதிர்ப்புகள் அனைத்தையும் பொறுமை வென்றுவிடுகின்றது, அது மனிதர்களின் நெஞ்சங்களை வயப்படுத்துகின்றது. அது வெற்றி காணுகின்றது, அடக்கியாளுகின்றது.

அமைதி பொறுமையைப் பின்தொடர்கின்றது, அது மிகப் பெரிய மேம்பட்ட பண்பாகும். இச்சையெனும்