பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

ஜேம்ஸ் ஆலன்


நல் ஒளி வீசும் களிப்பும், என்றும் நிலைக்கும் அமைதியும் இடம் பெறுகின்றன. எமர்சன் கூறுவது போன்று “களிப்பு நிலையானதாகவும் நடைமுறைப் பழக்கத்திற்குரியதாகவும் இருப்பதே அமைதியாகும்.”

தன்னடக்கம் செல்வத்திலும் சிறந்தது. அமைதியோ இறுதியிலாப் பேரின்ப நிலையே.

நடுநிலையுடைய நல்ல மனிதனிடமே மெய்யறிவு நிலையாக உறைகின்றது. அத் தாயின் அறிவரைகளே அவனுக்கு வழிகாட்டுகின்றன. அத் தாயின் சிறகுகளே அவனைப் பாதுகாக்கின்றன. அவள் மகிழ்ச்சிகரமான வழியிலேயே அவனைக் களிப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுகின்றாள்.

மெய்யறிவு பல்வகையானது. அறிவுடைய மனிதன் பிறருக்கேற்பத் தன்மனத்தை இணக்கப்படுத்திக் கொள்கின்றான். அவர்களுடைய நன்மைக்காக அவன் செயல்படுகின்றான். ஆனால், அதற்காக ஒழுக்க அறங்களையோ நேர்மையான நடத்தையின் நியதிகளையோ அவன் மீறுவதில்லை. மடமையுடைய மனிதன் பிறருக்கேற்பத் தன்னை இணக்கப்படுத்திக் கொள்ளவியலாது. அவன் தனக்காகவே செயல்படுகின்றான். ஒழுக்க அறங்களையும் நேர்மையான நடத்தையின் நியதிகளையும் தொடர்ச்சியாக மீறுகின்றான். நடுநிலையுடைய செயல் ஒவ்வொன்றிலும் ஓரளவு மெய்யறிவு இருக்கின்றது. ஒரு மனிதன் நடுநிலையின் எல்லையை ஒருமுறை தொட்டு அதை அனுபவித்துவிடின், அவன் இறுதியில் அதன்கண்