பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

ஜேம்ஸ் ஆலன்


மற்றது இருக்கின்றது. தன்னம்பிக்கையில் இழிவுடையது எதுவுமே இருக்கவியலாது. அதே போன்று தற்செருக்கில் சிறப்புடையது எதுவுமே இருக்காது.

பழமையான ஒன்றை அடிமைத் தளமாகப் பின்பற்றுதற்குப் பதிலாக ஒரு புதிய எடுத்துக் காட்டாக மாறுகின்ற வகையில் தனது சொந்த முயற்சியையே நம்பும்படி வலியுறுத்துகின்ற தன்னம்பிக்கை அவனுக்குத் தேவைப்படுகின்றது. ஏளனத்தைப் பொறுத்தவரை, ஏளனத்தால் மனம் நொந்துபோகின்றவன் மனிதனே அல்லன். தன்னம்பிக்கை மனிதனின் வலிமையான கவசத்தை ஏளனம், பழிப்பு இவற்றின் அம்புகள் ஊடுருவிச் செல்லவியலாது. அவனுடைய நேர்மையான நெஞ்சத்தின் வெல்ல முடியாத அரணைத் துன்புறுத்தவோ அன்றிப் புண்படுத்தவோ அவை நெருங்க வியலாது. பழிச்சொல்லாகிய கூர்மையான அம்புகளை அவன்மீது மழையெனப் பொழியலாம், ஆனால், அவனுடைய வலிமையான மார்புக் கவசத்தால் அவை திசை திருப்பப்பட்டு அவனருகே தீங்கற்று வீழ்கின்றபோது அவன் அவற்றைக் கண்டு சிரிக்கின்றான்.

“உன்னையே நம்புவாயாக” - “இந்த இரும்பு நாணையே ஒவ்வோர் நெஞ்சமும் மீட்டுகின்றது” என்று கூறுகின்றார் எமர்சன். மனிதர் தம் சொந்த இயல்பான எளிமையையும், இயற்கையான பெருந்தன்மையையும் ஆதாரமாகக் கொண்டிருப்பதற்குப் பதிலாகத் தலைமுறை,