பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

ஜேம்ஸ் ஆலன்


அவை நன்கு சமனாக்கப்பட்ட இயந்திரம் போன்று இயங்குதல் உண்மையேயாகும். முன்னோடும் நெடுந் தூரத்தை அவன் காணுகின்றான்; நேராகத் தன் குறிக்கோள் நோக்கிச் செல்லுகின்றான். இடர்ப்பாடு எனும் பகைவனை அவன் நண்பனாக மாற்றிவிடுகின்றான்; “எதிரி தன் வழித்துணையாகும் போது அவனுடன் ஒத்திணங்க” இவன் நன்கு கற்றுக் கொண்டுவிட்டதால் நலஞ் சேரும் வகையில் அவனைப் பயன்படுத்திக் கொள்கின்றான். கூரறிவு படைத்தளபதியைப் போன்று ஏற்படவிருக்கும் நெருக்கடிகள் அனைத்தையும் அவன் முன்னறிந்து கொண்டவனாகின்றான். அவனுடைய சிந்தனைகளில் தீர்ப்பின் அறிவுரைகளில் அவன் காரணங்களைக் கலந்தாராய்ந்து தற்செயல் நிகழ்ச்சிகள் அனைத்திலுமுள்ள சிறப்பைக் கண்டறிகின்றான். அவன் என்றுமே வியப்பிற்கு ஆளாவதில்லை; என்றுமே பரபரப்படைவதில்லை; தனது சொந்த உறுதிப்பாட்டைப் பாதுகாப்புடன் கொண்டு செலுத்துவதோடு, தனது ஆதரவைப் பொறுத்து உறுதியுடனும் இருக்கின்றான்.

களைப்பினால் செத்துச் செயலற்று நிற்கும் நிலையிலிருந்து வேறுபட்டது அமைதி. அது ஒருமுகப்படுத்தப்பட்ட ஆற்றலின் உச்சியாம். அதன் அடித்தளத்தில் குவிமையப் படுத்தப்பட்ட மனநிலை அமைந்திருக்கின்றது. கலக்கத்திலும், கிளர்ச்சியிலும் மன நிலை சிதறிவிடுகின்றது. அது பொறுப்பிழந்து ஆற்றலோ, சிறப்போ இல்லாதாகி விடுகின்றது. குழப்பமுற்றவனாகவும், சிடுசிடுப்பாகவும் சீற்றமுற்றனாகவும் இருக்கும் மனிதனுக்குச் செல்வாக்கு இருப்பதில்லை. அவன் கடிந்து விலக்குகிறானே அன்றிக்