பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 78


செயல்களிலும் அவன் அதை ஊட்டி வளர்க்கட்டும்; அவன் வெற்றியுறுகிறபோது வையகத்தின் வலிமைமிக்க தலைவர்களின் வரிசையில் தானும் இடம் பெற்றுவிடுவான்.

சால்பெனும் தூண் அத்துணை வலிமையும் திண்மையும் கொண்டதாகும். தனது வாழ்வெனும் கோயிலுள் அதன் நடுநிலை பிறழாத வேலைப்பாட்டைக் கட்டி முடிப்பவனே மனிதர் அனைவரையும் விட மேலான அருளும் ஆக்கமும் பெற்றவனாவான்.