பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

ஜேம்ஸ் ஆலன்



முறைப்பாடு

குழப்பத்திற்கு இடமின்றிச் செய்துவிடுகின்ற ஒழுங்கமைப்பு என்னும் அறமே முறைப்பாடு. இயற்கையான உலக ஒழுங்கமைப்பின்கண் ஒவ்வொன்றும் அதனதன் இடத்திலேயே அமையப் பெற்றிருக்கின்றது; எனவே, மிகவும் சரி நுட்பமான இயந்திரத்தைவிடக் கூடுதலான சரி நுட்பத்துடன் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. விண்ணில் ஏற்படும் ஒழுக்கக் கேடு உலக அழிவையே குறிக்கும்; மனிதன் செய்யும் காரியங்களில் ஒழுக்கக்கேடு அவனுடைய வேலைப்பாட்டையும், ஆக்கத்தையும் அழிக்கின்றது.

பல கலப்பான நிறுவனங்கள் அனைத்தும் முறைப்பாடு மூலமே உருவாக்கப்பட்டிருக்கின்றன. முறைப்பாடின்றி எந்த வாணிபமும் அன்றிச் சமூகமும் பெரிய உருவளவைகளுக்கு வளர்ச்சியடைய இயலாது; வணிகர், நிறுவனங்களை ஒழுங்கமைப்பவர், இவர்க்கு இந்த அறமுறையே முதன்மையான கருவியாகும்.

ஒழுங்கமைப்பில் கருத்துான்றுங்கால் அது வெற்றியைப் பெருக்கும் என்பது ஒருபுறமிருக்க, ஒழுங்கமைப்பில்லா மனிதனும் வெற்றியடைந்து விடக்கூடிய பல துறைகளும் உள்ளன. ஆனால், முறைப்பாடுள்ள