பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

ஜேம்ஸ் ஆலன்


திறப்பாடும் கொண்டு பொருத்தமின்மையைத் தவிர்க்காத நிலையில் எவ்விதமான குறிப்பிடத்தக்க வெற்றியும் இருக்கவியலாது. ஒழுங்கு முறையை வெறுப்போர், கட்டுப்பாடற்றுக் குழப்பமுற்றதாய் இருக்கின்ற மனமுடையோர், தமது சிந்தனை பழக்க வழக்கங்கள், தம் காரியங்களை நிறுவகித்துக் கொள்ளுதல் இவற்றில் கவனமின்றியும், ஒழுங்கின்றியும் இருப்போரான மக்கள் மிகுந்த வெற்றி கொள்ளவோ, ஆக்கம் பெருக்கவோ இயலாது. தமது வாழ்வைத் தொந்தரைகள், துன்பங்கள், இடர்ப்பாடுகள், சிறிய நச்சரிப்புகள், இவற்றால் நிரப்பிக் கொள்கின்றனர். ஏற்புடைப் போக்கில் வாழ்வை ஒழுங்குபடுத்துங்கால் இவை அனைத்தும் அழிந்துபடும்.

முறைப்பாடற்ற மனம் பயிற்சியற்ற மனமே. உடற்பயிற்சிப் போட்டிகளில் பயிற்சி செய்யாத போட்டியாளர் கவனமுடன் பயிற்சி செய்துள்ள எதிராளியுடன் வெற்றியுறப் போட்டியிட முடியாதவாறு போல, பயிற்சியற்ற மனம் வாழ்வெனும் போட்டியில் நன்கு ஒழுங்குபட்ட மனங்களுடன் ஈடுசெலுத்தவியலாது. எதுவாயினும் சரியே என்றெண்ணுகின்ற ஒழுங்குறுத்தப்படாத மனம் நன்கு ஒழுங்குறுத்தப்பட்ட மனங்களின் பின்னொதுங்க விரைந்து வீழ்ச்சியடைகின்றது.

பொருள் சார்ந்ததோ, மனஞ்சார்ந்ததோ ஒழுக்கநெறி சார்ந்ததோவான வெகுமதிகளாயினும், வாழ்வின் வெகுமதிகளைப் பெறும் கடுமையான போட்டியில் மிகச் சிறந்தனவே, அதற்குத் தகுதியுடையன என்பதை ஒழுங்குறுத்தப்பட்ட மனங் கொண்டோரே நன்கறிவர்.