பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெற்றிக்கு எட்டு வழிகள்

 90


ஒத்துக் கூடாததுமான கோட்பாடுகளால் தம் மனங்களில் சுமையேற்றிக் கொள்கின்றனர். தத்தம் இயல்பின் காரணமாகவே நடைமுறையில் செயற்படுத்த முடியாத கோட்பாட்டுகளைக் கைக் கொண்டு தோல்வியை நாடுகின்றனர். வெறும் பேச்சிலும், தருக்கத்திலுமின்றித் தாம் செய்து முடிப்பதிலேயே தம் ஆற்றல்களை வெளிக்கொணரவல்ல மனிதர் புரட்டல்களையும், இக்கட்டு நிலைகளையும் தவிர்த்து, ஏதேனும் நன்மையான, பயனுடைய விளைவை நிறைவேற்றத் தம்மைச் செயல்படுத்துகின்றனர்.

நடைமுறைக்கு வர முடியாத ஒன்று மனத்திற்கு ஊறு செய்ய இடந் தருதல் கூடாது. அது வீசி எறியப்பட வேண்டும். கைவிடப்பட வேண்டும்; புறக்கணிக்கப்பட வேண்டும். தன் கோட்பாடு எவ்வகைப் பயன் விளைவையும் கொண்டதன்று என்பதை மெய்பித்துக் காட்ட வேண்டுமெனின், அஃது ஒர் அழகான கோட்பாடு எனும் பிடியை அவன் நிலையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அண்மையில் ஒருவர் கூறினார். வாழ்வில் எவ்விதப் பயனும், மெய்ம்மையில் எவ் வகைத் திண்ணமான அடிப்படையும் இல்லாதனவாய் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டனவும், பெயரளவில் “அழகானவை”யாக இருக்கின்ற கோட்பாடுகளைப் பற்றிக்கொண்டிருக்க ஒருவன் விரும்புவானாயின் அவன் உலகியல் சார்ந்த தன் முயற்சிகளில் தோல்வியடைந்தால் வியப்படைதற்கில்லை. ஏனெனில், அவன் நடைமுறைப் பயன் கருதா மனிதனாவான்.

மனிதனின் ஆக்கம் அவன் சமூகத்திற்குப்