பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

ஜேம்ஸ் ஆலன்


அவன் தன்னை அவர்களிடத்திலே வைத்து, அப்போதைக்கு அவர்களாகவே ஆகிவிடுகின்றான். “காயமுற்ற மனிதனிடம் அவன் எவ்வாறிருக்கின்றான் என்று நான் கேட்பதில்லை. நானே காயமைடந்தவனாக மாறிவிடுகிறேன்” என்று மருத்துவமனை வீரன் விட்மேன் இந் நிலையினை விளக்குகின்றார்.

துன்பப்படுகின்ற ஓருயிரை வினவுதலே ஒரு வகையான துடுக்குத்தனமாகும். துன்பப்பாடு எதிர்பார்ப்பது உதவியும் இரக்கச் சிந்தையுமேயன்றிக் காரியமறியும் ஆர்வமன்று. இரக்கச் சிந்தையுடைய ஆண்மகனோ பெண்மணியோ துன்பமுணர்ந்து அதைத் தணிவுறுத்தும் வகையில் தொண்டு புரிகின்றனர்.

இரக்கம் தற்புகழ்ச்சி கொள்ளாது. தற் புகழ்ச்சி எங்கெங்கு உள் நுழைகின்றதோ, அங்கிருந்து இரக்கம் வெளியேறி விடுகின்றது. ஒருவன் அன்பு ததும்பும் தன் செயல்கள் பலவற்றைக் குறிப்பிட்டு விட்டு அதற்கு மாறாகத் தனக்குக் கிடைத்த விருந்தை குறை கூறுவானாயின், அவன் அன்பு ததும்பும் செயல்களைச் செய்தவனாக மாட்டான். இரக்கத்தின் இனிமையாகிய தன்னை மறந்த பணியை அவன் இனித்தான் அடைய வேண்டும்.

இரக்கத்தை அதன், ஆழ்ந்த பொருள் கொண்டு பார்கையில் அது பிறருடைய முயற்சிகளிலும், துன்பங்களிலும் அவர்களுடன் ஒன்றிவிடுவதாகும். அவ்வகையில்தான் இரக்கம் கொண்ட மனிதன் ஒரு கலவைப் படைப்பாகின்றான்; அவன் பல மனிதர்களுள் ஒருவன்.