பக்கம்:வெற்றி நமதே.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வகுக்கப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை எல்லாம் காங்கிரஸ் கட்சியினுடையே தலைவர் அவர்களும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். முதலாளிகள், வணிகக் கோமான்கள்- இவர்கள், போரைப் பயன்படுத்திக் கொண்டு கள்ளச் சந்தை, இருட்டு வியா பாரம் இவைகளிலே தங்களுடைய வருவாயைப் பெருக்கிக் கொள்ள முனையக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்த வேண் டும் என்று சொன்னார்கள். சென்ற உலக மகா நாம் கேள்விப் பட்டிருக்கிறோம், யுத்தத்தின்போது, சாதாரணமாக ஏழையாக இருந்த ஒருவர் பெரும் பணக்காரராகி, எப்படி வசதி என்றால் 'யுத்தத்தில் நன்றாகச் சம்பாதித்து விட்டார்' என்பதாக. இப்படி ஓர் அடைமொழியைச் சேர்த்துச் சொல்லப்பட்டதை எல்லாம் நாம் இந்தத் தடவை பெறக்கூடாது. இந்தத் தடவையுத்தத் தில் கரமிழந்தார், கால் இழந்தார், நிறையத் தியாகம் செய் தார் என்கிற புகழை ஈட்டிக் கொள்ள வேண்டுமேயல்லாது யுத்தத்தில் சம்பாதித்து விட்டார் என்கிற அடைமொழியைப் பெறுகிற அளவுக்கு அந்தஸ்துத் தோன்றுவதற்கு இடமளித் தல் ஆகாது. போர்வீரர் குடும்பமும் அரசாங்கமும் அதில் தமிழ்நாட்டு அரசாங்கம் மிகக் கூர்மையாக இருந்து கடுமை யான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் நான் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். உ நம்முடைய நண்பர் திரு ஹண்டே அவர்கள் இரண்டு மூன்று கருத்துக்களை சொன்னார்கள். அவர்கள் இன்றைக்கு குறிப்பாக போர்க்களத்திற்குச் செல்லுகிற வீரர்களுக்கு நல்ல பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றார்கள். சாவில் இருந்து போர் வீரர்களைக் காத்துக் கொள்ளப் பாதுகாப்பு இல்லை. போர்க்களத்திற்குச் செல்கி கிறவர்களே ஓரளவு திரும்பி வர மாட்டோம் என்கிற உறுதியோடு செல்கிறார் கள். வெற்றி பெற்றே திரும்பி வருவோம் என்கிற அளவில் செல்கிறார்கள். போர்க் களத்திற்குச் சென்றவர்களை நாம் பார்த்திருக்கிறோம்- கேள்விப்பட்டிருக்கிறோம். போர்க்களத் திற்குச் சென்றவனின் உடை திரும்பி வந்து மாதாவின் கண்ணீரால் நனைந்தது என்பதாக. அவன் திரும்பவில்லை, அவன் அணிந்திருந்த உடைதான் வந்தது என்று. இன்னும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், எத்தனையோ அண்ணன் மார்களை போர்க்களத்தில் இழந்த தம்பிமார்கள் கண்ணீர் விட்டு நின்றதாக. ஏன் இதுவும் கூடக் கேள்விப்பட்டிருக் கிறோம். காதலியார்கள்-போர்க்களத்தில் 109-111-3 தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/19&oldid=1706853" இலிருந்து மீள்விக்கப்பட்டது