பக்கம்:வெற்றி நமதே.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 செல்வன் நினைவாக, வீட்டுத் தலைவனின் நினைவாகப் பேழை யில் வைத்துப் பூட்டி, மலர் கொண்டு பூஜித்துக் கொண்டு இருக்கின்ற வீட்டுத் தாய்மார்கள், நம் அனுசரணைக்கும், யாரும் மறந்துவிடக் ஆதரவுக்கும் உரியவர்கள் என்பதை கூடாது. போர் வெற்றியைக் கொடுக்கும். ஆனால், போருக்குப்பின் ஏற்படுகின்ற விளைவுகளை நாடு சமாளித்துத் தீர வேண்டும். அப்படிச் சமாளிக்கின்ற ஆற்றலை நாம் அனைவரும் பெற்று இருக்கின்றோம். வீரத்தாய்மார்கள் ஆறுதலும் மகிழ்ச்சியும் பெற நம்முடைய மன்றத்தில் கட்சித் தலைவர்கள் அனைவரும் எடுத்துக் காட்டியது போல், ஒவ்வொரு சட்டமன்ற உறுப் பினருக்கும் அந்தக் கடமை உண்டு; இந்த நாட்டில் இருக் கின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு; அரசாங்கத்திற்குத் தகவல் கிடைத்ததும், மாவட்ட அதிகாரி மூலமாகத் தகவல் அந்த அந்த இடங்களுக்குத் தரப்படுகிறது. அந்த நேரத்தில், அதிகாரிகள் அந்த வீட்டாருக்கு ஆறுதல் கூறுவதற்கு முன்பாக, ஆங்காங்கே மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஒன்றியத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் சென்றார்கள் என்று சொல்லுகின்ற வுக்குச் சில இடங்களில் கூடுமானால் அமைச்சர்களே இல்லங்களுக்குச் சென்றார்கள் -ஆறுதல் சொன்னார்கள் என்று அதிகாரிகளை முந்திக்கொண்டு நாம் நின்றால்தான் 'நம் மகன் இந்த மானப் போர்க்களத்தில் மடிந்து வி லும், அந்த மகனுக்குப் பதிலாக, இதோ, ன்னொரு மகன் இருக்கிறான்' என்று அந்தத் தாய்மார்கள் மகிழ்ச்சி யும் ஆறுதலும் அடைவார்கள்.' நம் தாய்த்திருநாடு எழுச்சி யினைப் பெறமுடியும். வீர மறவர்களைப் போற்றி வணங்குவோம் ! ள அள் கூட நம்முடைய நாடு புறநானூற்றுப் புகழ் கொண்ட நாடு. புறநானூற்றுத் தாய்மார்கள் வாழ்ந்த நாடு, நம் தமிழ் நாடு. இங்கே வீரத்திற்குப் பஞ்சம் இல்லை. மானத்தை நிலைநாட்ட மறவர்கள் போர்க்களத்தில் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுப்பது நம் நாட்டைப் பொறுத்த வரையில் புதிதல்ல. . வெங்கொடுமைச் சாக்காட்டில், விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்; வெங்குருதி தனில்கமழ்ந்து வீரம் செய்கின்ற மூச்சு எங்கள் மூச்சாம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/34&oldid=1706868" இலிருந்து மீள்விக்கப்பட்டது