பக்கம்:வெற்றி நமதே.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெரிவித்திருப்பதற்கு நாமெல்லாம் மகிழ்ச்சியடை கின்றோம்' என்றும், இன்றைக்குப் பங்களா தேஷ் இந்திய அரசின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது. இன்னும் இரு வார காலத் திற்குள் பங்களா தேஷ் முழுவதும் பாகிஸ்தான் கையிலிருந்து விடுவிக்கப்பட்டு, விடுதலை வீரர்களி டம் ஒப்படைக்கப்படுகிற செய்தி நிச்சயமாக வர இருக்கிறது என்பதனை நாமெல்லாம் எதிர்பார்க்க லாம். "பங்களா தேஷ் புதிய அரசின் கொடி, விடுதலை வீரர்களின் புகழ் பாடியவண்ணம் பறக்கப் போகி றது! இன்னும் 10 அல்லது 15 நாட்களில் கூடப் போர் முடிந்து விடக் கூடும். என்பன போன்ற பல்வேறு கணிப்புகளைத் தெரி வித்தார்கள். அந்தக் கணிப்பின்படி, யாகியா கானுக்கு இதுவே கடைசிப் போராகி, பங்களா தேஷ் முழுவதும் விடுவிக்கப்பட்டு, விடுதலை வீரர் களிடம் ஒப்படைக்கப்படும் புதிய வங்கம்- சுதந் திர வங்கம் உதயமாகி விட்டது ! பங்களா தேஷ் புதிய அரசின் கொடி, விடுதலை வீரர்களின் புகழ் பாடிய வண்ணம் பட்டொளி வீசிப் பறக்கிறது ! போரும் முடிந்து விட்டது ! வெற்றி நமதே ! எதிரிகள் வீழ்வது உறுதி ' என்று முதல்வர் அவர்கள் வானொலியில் முழக்கி னார்கள். இன்று நமது வெற்றியை உலக நாடுகள் பாராட்டுகின்றன. இந்தப் போரின் தொடர்பாகத் தமிழக முதல்வர் அவர்கள், சட்டப் பேரவையிலும் மேலவையிலும் ஆற்றிய பேருரைகளையும், வானொலி உரையை யும், சுதந்திர வங்கம் உதயமானதைப் பாராட்டிச் சட்டப் பேரவையிலும் மேலவையிலும் தீர்மானம் நிறைவேற்றி ஆற்றிய பேருரைகளையும் இங்கே தொகுத்துத் தருகிறோம் ! சென்னை, 20-10-1971 வணக்கம். செய்தி-மக்கள்தொடர்புத் துறை, தமிழ்நாடு அரசு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெற்றி_நமதே.pdf/6&oldid=1706840" இலிருந்து மீள்விக்கப்பட்டது