பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வாசவதத்தையைப் பிரிய நேரிடுமே என்று கருதி அதற்கு மறுத்துவிட்டான். நண்பர்கள் அவன் நிலைக்கு வருந்தி, ஒன்றும் செய்ய இயலாமல் வறிதே இருக்க நேர்ந்தது. இது நிகழ்ந்து முடிந்த சில நாள்கள் சென்றபின் வாசவதத்தையே உதயணனிடம் வேட்டையாடும் நிமித்தமாகக் காடு சென்றுவிட்டுத் திரும்பி வரும்போது பல பூக்களாலும் தழைகளாலும் அழகிய மாலை தொடுத்துத் தனக்குக் கொண்டு வருமாறு வேண்டிக் கொண்டாள்.

தத்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாத உதயணன், வேகமாகச் செல்லவல்ல குதிரை ஒன்றின்மீது ஏறிக் காடு சென்றான். இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தத்தையை உதயணனிடமிருந்து பிரிக்க விரும்பினர் நண்பர். ‘அரசன் இன்ப நுகர்ச்சியில் ஆழ்ந்து பிறவற்றை நோக்கானாயினன்’ என்று காட்டு வேடர்கள் வந்து அரண்மனைக்குத் தீயிட்டுவிடப் போவதாக எங்கும் செய்தியைப் பரப்பினர். தாங்களே சில ஏவலாளர்களை விட்டுத் தத்தை இருந்த அரண்மனையைத் தீக்கு இரையாக்கிவிட்டு, உள்ளிருந்த தத்தையையும் சாங்கியத் தாயையும் அரண்மனையின் அடிப்பகுதி மூலம் யுகி வசிக்கும் இடத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த சுரங்கவழியாக அங்கே அனுப்பிவிட்டனர். எரிந்துபோன அரண்மனையில் தத்தையின் அணிகலன்களை அங்கும் இங்குமாகச் சிதறி அவளும் எரிபட்டு இறந்தனள் என்று உதயணன் நம்புமாறு செய்து வைத்தனர். திட்டத்தில் முழுப்பங்கு கொண்டு உதயணன் நலத்திற்காக உழைக்கும் முக்கிய நண்பர்களைத் தவிர வேறு எவரும், 'தத்தை, சாங்கியத் தாயுடன் உயிரோடு சுரங்க வழியாகத் தப்பிச் சென்று யூகியிடம் உள்ளனள்' என்பதை அறிய வில்லை.

இலாவாண நகர அரண்மனை இவ்வாறு தீப்பட்டு எரிந்துபோன அளவிலே தப்பிச் சென்ற சாங்கியத் தாயும் வாசவதத்தையும் யூகியிருக்கும் இடத்தைச் சென்று அடைந்தனர். முன்பின் தெரியாத அங்கே சாங்கியத் தாயுடன் ஓடி