பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தை புகுந்த செல்வன்

169

தனவோ? நீ இவ்வாறு தளர்ந்திருக்கக் காரணம் யாது? இந்நிலையில் இன்றும் வண்டியில் ஏறிக் காமன் கோட்டம் செல்ல இயலுமா?” என்று அவர்கள் பதுமையைக் கேட்டனர்.

“விழா முடிகின்றவரை அரசனே மறுத்தாலும் நாம் கோவிலுக்குச் சென்று வரவேண்டுவது அவசியம்! இதை நீங்கள் என்னிடம் கேட்கவே வேண்டாம் இன்றும் விழாவுக்குச் செல்ல வண்டியைக் கொண்டு வருக” என்று பதுமை மறுமொழி கூறவும் விரைவாக வண்டியைக் கொணர்ந்து வாயிலில் நிறுத்தினர்.

உடனே முதல் நாள் போலவே தோழியர் புடைசூழப் பதுமாபதி வண்டியில் வந்து ஏறிக் கொண்டாள். ஆனால் இன்றைக்கு அவளிடம் தென்பட்ட அவசரத்தில் ஏதோ ஒரு பொருளைத் தேடும் ஆர்வம் இருந்தது. அப்படித் தேடிய பொருள் உதயணனின் அழகிய முகமாக இருந்தது.

34. சிந்தை புகுந்த செல்வன்

துமாபதியின் ஆர்வமும் அவசரமும் தூண்ட அரண்மனையை விட்டுப் புறப்பட்ட வண்டி அவள் மனத்தைப் போலவே காமன் கோவிலை நோக்கி வேகமாகச் சென்றமையால் சற்றைக்கெல்லாம் அங்கே போய்விட்டது. சித்திர மாடத்தைக் கடந்து காமன் கோவிற் பூங்காவினுள் சென்று வண்டி நிற்கவும் பதுமை இறங்கினாள். அவளுடைய இணை விழிகள் புன்னை மரத்தடியில் அவனைத் தேடின. அப்படித் தேடி விரைந்த அவள் பார்வை மரத்தடிக்குச் செல்லு முன்பே நடுவில் அங்கிருந்து வந்த அவன் பார்வையைச் சந்தித்தது. ஆம்! உதயணன் அங்கே புன்னை மரத்தடியில் முதல் நாளைப் போலவே இவள் வரவு நோக்கிக் காத்துக் கொண்டிருந்தான். இரண்டும் இரண்டும் நான்கு கண்கள் கலந்து உறவாடிக் காதல் கதைகள் பேசின. தன் விருப்பத்தை அவனுக்குக் குறிப்பினால் வெளிப்படுத்த எண்ணிய பதுமை, புன்னை மரத்திற்கு எதிரே இருந்த ஒரு