பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இசைச்சன் திருமணம்

255

அந்த நோக்கம் இவ்வளவு சுலபமாக நிறைவேறினால் அவர்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படாதா என்ன? உதயணன் மகிழ்ச்சியாவது ‘பதுமை உலகறியத் தன்னுடைய காதற்கிழத்தி ஆகிறாள்’ என்ற காரணத்தால் ஏற்பட்ட காதல் மகிழ்ச்சி. நண்பர்களின் மகிழ்ச்சியோ ‘நமது கடமையையும் இதனால் நிறைவேற்றிவிட்டோம்’ என்ற பூரணமான மகிழ்ச்சியாக இருந்தது.

உதயணன் இசைவைப் பெற்று அரண்மனைக்குத் திரும்பிச் சென்ற அமைச்சன், மகதவேந்தன் தருசகனிடம் நிகழ்ந்தவற்றை விரிவாகக் கூறினான். முதலில் பதுமையை உதயணன் மணக்க மறுத்ததையும் பின்பு சம்மதித்ததையும் தருசகன் அறிந்தான். ‘உதயணன் பதுமாபதியைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துவிட்டான்’ என்று எண்ணும் போதே அவனுள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தது! உதயணன் சற்றும் எதிர்பாராத நிலையில் மகதநாட்டிற்கு வந்தது, தனக்கு உதவி செய்தது, பதுமையை மணந்து கொள்வதற்கு இசைந்தது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளுமே விதி தனக்கென்று செய்யும் சாதகங்களாக அவனுக்குத் தோன்றின. அமைச்சன் மூலமாக உதயணனின் சம்மதம் தெரிந்து, தருசகன் இவ்வாறு மகிழ்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கே உதயணன் புதிய கவலை ஒன்றினாற் சூழப்பட்டிருந்தான். மறுப்பதைப்போல நடித்து இறுதியில் அமைச்சனிடம் இசைவு தெரிவித்து அனுப்பியபின் சிறிது நேரங்கழித்து இந்தப் புதிய கவலை அவனைப் பற்றியது. என்ன செய்யலாம் என்ற சிந்தனையில் உதயணன் மூழ்கினான்.

‘காமன் கோட்டத்தில் நாம் பதுமையைச் சந்தித்ததும், பழகியதும், காதல் கொண்டதும் மாணகன் என்ற அந்தண இளைஞனின் தோற்றத்துடனே ஆகும்! இப்போது திடு மென்று ‘நீ உதயணனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்’ என்று அவள் தன் தமையனிடமிருந்து கேள்விப் பட்டால், என்னை மாணகன் வடிவத்தில் பார்த்துப் பழகி