பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/263

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் பாக்கியம்

261

போல் இருக்கின்றதே’ என்று அவள் சிந்திக்கும்படி நேரிடும்! அவளுடைய அந்தச் சிந்தனையின் பயனாக மெய் வெளிப் பட்டுப் பதுமையளவிற்காவது பரவித் தெரியலாம். தெரிவதற்கு ஏது இருக்கிறது என்று நீண்டநேரம் சிந்தித்த பின்னர், ‘எவ்வாறேனும் தன்னுடைய குரலை யாப்பியாயினி கேட்குமாறு செய்தாக வேண்டும்’ என்ற முடிவிற்கு வந்தான் உதயணன்.

தன் முடிவைச் செயலாக்குவதற்கு ஏற்றவாறு மணமக்களுக்குச் சமீபத்தில் அவன் இருந்தான். மண நிகழ்ச்சிகளுக்கு இடையே இசைச்சனை அழைத்து, “எழில் மிகுந்த கோசாம்பி நகரத்தையும், அந் நகரத்திற்கு அழகு செய்யும் யமுனை நதியையும் அதன் இரு கரையிலும் வளமிகுந்து விளங்கும் பசுஞ் சோலைகளையுங் உனக்கு மனைவியாகும் பெரும்பேற்றினால் யாப்பியாயினி காணப் போகிறாள். அவளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இல்லை என்றால் நாம்தான் மகதத்திற்கு வருவானேன்? இப்படி இவை எல்லாம் நிகழவேண்டும் என்று விதியே வகுத்துக் கொண்டு நம்மை இங்கே வரவழைத்துக் கொண்டதோ என்னவோ?” என்று தன் குரல் யாப்பியாயினிக்குக் கேட்கும் படி இரைந்து கூறினான் உதயணன்.

50. பதுமையின் பாக்கியம்

தயணன் இசைச்சனை அழைத்துப் பேசிய அந்தக் குரலைக் கேட்டதும் அவன் எதிர்பார்த்தது போலவே யாப்பியாயினி உடனே ஆவலோடு அவன் பக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். உதயணன்மீது சில விநாடி நேரம் அவளது பார்வை நிலைத்தது.

‘இந்தக் குரல் இதற்கு முன்பே எங்கோ கேட்டுப் பழகிய குரலைப்போல் அல்லவா இருக்கிறது? ஆம்! இப்போது நினைவு வருகிறது! சந்தேகம் இல்லாமல் இது மாணகனுடைய குரலேதான்' என்று யாப்பியாயினி இவ்வாறு எண்ணமிடலானாள். தான் ஏற்கெனவே கண்டிருந்த மாணக