பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

288

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பொறுப்பில் அவனைப் பூரணமாக நம்பி அளித்தான் ஆருணி, படைகள் உதயணன் தங்கியிருக்கும் மலையடிவாரத்தை அடைவதற்குள், இடையே ஒரு பெரிய காட்டாற்று வெள்ளத்தையும் கடக்க வேண்டியிருந்தது. அதற்கு வேண்டிய படகுகளையும் உடனே ஏற்பாடு செய்தனர். வருடகாரன் தன் பொறுப்பையும் சேனாபதிப் பதவியின் பெரிய கடமையையும் உணர்ந்துகொண்டு நடிப்பவனைப் போன்று படைகளை முறைப்படுத்தி, மறுகரைக்குப் படகுகளில் ஏற்றி அனுப்பினான். படைகள் யாவும் மறுகரையை அடைத்ததும் வருடகாரன் ஆருணியை அணுகி வணக்கத்தோடு. “இனி மேல் என்ன செய்யலாம் அரசே!” என்று விநயமாகக் கேட்டான். ஆருணி அவனுக்கு மிகுந்த சிறப்புக்களை அளித்துத் தன் பக்கலில் அன்போடு அமர்த்திக் கொண்டான். தன் சூழ்ச்சிக் கருத்தை முடிப்பதற்கு ஏற்ற பதவியே தனக்குக் கிடைத்திருக்கிறது என்ற திருப்தியோடு சேனாபதியாக நடித்தான் வருடகாரன்.

55. படைச் செலவு

ருடகாரனின் தலைமையில் ஆருணியரசனின் படைகள், படகுகள் மூலமாக வெள்ளத்தைக் கடந்து மறுகரையிற் சேர்ந்தபின்பு, சென்ற இடம் வஞ்சகாந்தை, காந்தவதி என்னும் இரண்டு நதிகள் ஒன்றுகூடும் சங்கமமுகம். இரண்டு நதிகளும் சங்கமமாகும் அந்த இடத்திற்கு அப்பால் அடர்ந்த பெருங்காடு பரந்து இருந்தது. அந்தக் காட்டில் ஆருணிக்கு வேண்டிய வேடர்கள் பலர் இருந்தனர். ஆற்றுக்கு மறுகரையில் வருடகாரனும் ஆருணியும் அமர்ந்து கொண்டிருந்த போது, அந்தக் காட்டு வேடர்கள் யாவரும் தங்கள் தங்கள் தலைவர்களின் கீழ் அணிவகுத்து வந்த ஆருணியின் படைகளோடு ஒன்று சேர்ந்து கொண்டனர். படையின் வன்மை வேடர்களால் பெருகுவது கண்டு ஆருணி மகிழ்ந்தான், ‘தங்கள் சூழ்ச்சி தரைமட்டமாகி விடுமோ?’ என்று வருடகாரன் உள்ளுறத் தயங்கினான். இவர்கள் இவ்வாறு