பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/321

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இழந்த பொருள்களின் வரவு

319

லானோம். அங்கு விதி எங்களை அமைதியாக இருக்க விடுவதாயில்லை. வருத்தமானன்மேல் பகை கொண்டிருந்த அவன் தமையன் இரவிதத்தன், திடீரென்று புண்டர நகரத்தின் மேல் படையெடுத்துத் துன்புறுத்தவே, அங்கிருந்தும் நாங்கள் தப்பி ஓடி அந் நகரத்திற்கு அரண்போல அமைந்திருக்கும் ஒரு மலைச் சாரலை அடைக்கலமாகக் கொண்டு அங்கே புகுந்தோம். அவ்வாறு அந்த மலைச்சாரலில் வசித்து வந்த போதுதான், உதயணன் கோசாம்பி நகரை வென்றுவிட்ட செய்தியும் பதுமை அவன் மனைவியானது முதலிய பழைய நிகழ்ச்சிகளையும் நாங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. யூகி இப்போது இவற்றை அறிந்து கொண்டபின், ‘தத்தையை இனிமேல் எப்படியும் உதயணனிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டும்’ என்றெண்ணியே இன்று என்னை இங்கே திருமுகத்தோடு அனுப்பினார். அவர்கள் எல்லோரும் இப்போதும் புண்டர நகரத்து மலைச்சாரலில்தான் வசித்து வருகிறார்கள். மேலே நடக்க வேண்டியவைகளை விளக்கி, நீங்கள் என் வசம் இனிமேல் கூறி அனுப்பப்போகும் செய்திகளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனவே விரைவில் எனக்குச் செய்தி கூறி அனுப்புங்கள்” என்று சாதகன், உருமண்ணுவாவை நோக்கிக் கூறி வேண்டிக் கொண்டான்.

உடனே உருமண்ணுவா, சாதகனைச் சிறிதுபோது அங்கே தாமதிக்கும்படி கூறிவிட்டு அரண்மனைக்குள் நுழைந்து, யூகியின் திருமுகத்தோடு அவசரமாகத் தருசக மன்னனைச் சந்திப்பதற்காகச் சென்றான். அப்போதிருந்த நிலையில் தருசகனைப் போன்ற ஒரு பேரரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறி, ஆலோசனை கேட்டுக் கொண்டு அதன்படி நடப்பதே சிறந்ததாக இருக்கும் என்று உருமண்ணுவாவின் மனத்தில் தோன்றியது. வியப்புக்குரிய மிகப் பெரிய இரகசிய உண்மைகளாயினும் அவற்றை அந்த நிலையில் தருசகனிடம் விவரித்துச் சொல்ல வேண்டியதாகத்தான் இருந்தது. உருமண்ணுவா ஒவ்வொன்றாகக் கூறிக்