பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/355

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பந்தாடிய சுந்தரிகள்

353

வாசவதத்தைக்கு உண்டாயிற்று. ‘உண்மையில் அந்த அழகியை உதயணன் அப்போதே மாறுவேடத்துடன் கண்டு கொண்டிருக்கிறான்’ என்பதை அவள் எவ்வாறு அறிவாள்? பதுமை முதலாக அந்தக் கூட்டத்திலிருந்த மற்றவர் யாவருக்கும்கூட வாசவதத்தைக்கு ஏற்பட்டதுபோல் மானனீகையின்மேல் இவ்வாறு பொதுவாக ஒரு பொறாமை ஏற்படவே செய்தது.

மானனீகை பந்தாட்டத்தை நிறுத்தியவுடனே ஆசையால் தன்னை மறந்துவிட்ட உதயணன், சற்று அருகிலே சென்று அவளைக் காணவேண்டும் என்று விரும்பினான். எனவே உடனே தான் அமர்ந்திருந்த பெண் யானையின் மேலிருந்து கீழே இறங்கிச் சட்டென்று தன்னுடைய பெண் வேடத்தைக் கலைத்துவிட்டான் அவன். வேடம் கலைந்தவுடன் தன் சுய உருவத்தோடு அவர்களுக்கு இடையே அவன் சென்று நின்றான். சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று அவனை அங்கே கண்டதினால் பதுமை, தத்தை முதலிய யாவரும் அச்சமும் நாணமும் கொண்டு அங்கிருந்து ஓடிச் சென்று விட்டனர். அங்ஙனம் ஓடிச் சென்றுவிட்ட அவர்கள், நேரே தத்தை அந்தப்புரத்திற்குள்ளே போய் மறைந்து கொண்டனர். ‘மானனீகையின் அழகுக் கவர்ச்சியினால் தன்வசமிழந்து ஓடி வந்திருக்கிறான் உதயணன்’ என்பதை அவன் நிலையிலிருந்து புரிந்து கொண்டாளாகையினால், மானனீகையை வாசவதத்தை ஒர் அறைக்குள் தள்ளி மறைந்திருக்கும்படி செய்து விட்டாள்.

மானனீகையை மீண்டும் உதயணன் கண்டு விடாதபடி செய்துவிட வேண்டும் என்பது அவள் கருத்து. ‘மானனீகையின் அழகால் அரசன் என்ன ஆவானோ?’ என்ற பயம் அவளுக்கு உண்டாயிற்று. பூஞ்சோலையில் தான் திடுமென்று சென்று நின்றதும் யாவரும் ஓடி விட்டதனால் ஏமாற்றமடைந்த உதயணன், ‘மானனீகையை இனி எப்படிக் காணுவது?’ என்று கலங்கினான். ‘உடனே தத்தையையும் பதுமையையும் அழைத்துக் கேட்டால் என்ன?’ என்று

வெ.மு. 23