பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மானனீகை பிழைத்தாள்

369

மானனீகையைச் சுட்டிக்காட்டி அந்தத் தோழியிடம் மெல்லிய குரலில் கேட்டான். அவனுடைய இந்தக் கேள்வியை வாசவதத்தையே செவியுற்று விட்டதனால் பெண் புலிபோலச் சீறிக்கொண்டே அவனுக்கு மறுமொழி கூறுவதற்காகத் திரும்பினாள். வயந்தகன் வாசவதத்தையை அன்றுவரை அவ்வளவு சினத்துடன் கண்டதே இல்லை. “அரசன் என்னும் மதிப்பிற்குரிய பெயரோடு உலாவும் துர்த்தனாகிய கள்வனைக் கேட்டால் அல்லவா இவள் இழைத்த குற்றம் என்னவென்பது தெரியும்?” சுடச்சுட இப்படி வயந்தகனுக்குப் பதில் கூறினாள் தத்தை. அதன் பின்னர் தன் பக்கத்தில் இருந்த தோழியை அருகில் அழைத்து அவள் கையில் ஒரு கூர்மையான கத்தரிகையைக் கொடுத்து மானனீகையின் கூந்தலைச் சிதைக்குமாறு வேண்டினாள்.

அந்தச் சந்தர்ப்பத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய வயந்தகன், “இவள் கூந்தலை எவ்வாறு கத்தரிகையால் விரைவில் அறுக்கலாம் என்பதை நான் நன்கு அறிவேன். இவள் இழைத்த குற்றம் உண்டாயின் நானே இவள் கூந்தலை அரிகின்றேன். கத்தரிகையை என்னிடம் அளியுங்கள்” என்று கூறித் தானே வலுவில் முன் வந்து அந்தக் கொடும் பணியை ஏற்பவன் போல் ஏற்றுக்கொண்டான். வாசவதத்தையும் தோழியை நோக்கிக் கத்தரிகையை வயந்தகனிடம் கொடுக்குமாறு ஏவினாள். தோழியும் கத்தரிகையைப் பணிவுடனே அவனிடம் நீட்டினாள். தோழியின் கையிலிருந்து கத்தரிகையை வாங்கிக்கொண்ட வயந்தகன் அப்படியே பேச்சை வளர்த்து வளர்த்து நேரத்தைக் கழிக்க முற்பட்டான்.

உதயணனுக்கு அவன் கொடுத்துவிட்டு வந்திருந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது ஒன்றே அப்போதிருந்த அவனது நோக்கம். “தேவீ! கூந்தலைக் கத்தரிக்கும் கத்தரிகைகளின் வகைகள் பல, அவற்றின் இலட்சணங்களும் பல. சிலவற்றினாலே நன்மை தீமைகள் விளைவதும் உண்டு” என்று வயந்தகன் தன் பேச்சைத் தொடங்கினான். ஒன்றன்