பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

செய்தான். பொன்னிலும் மணியிலும் ஆகிய சிவிகைகள், பொற் பேழைகள் முதலியவற்றை அவளுக்கு அன்பளிப்பாக அளித்தான். புனலாட்டு விழா, தெய்வ விழா முதலிய விழாக்கள் நிகழுகிற காலத்தும், நருமதைநகர் கடந்து சென்று அவற்றில் பங்கு கொள்ள வேண்டாமென்றும் பொது மக்கட்குரிய பிற நிகழ்ச்சிகளையும் அவள் நீக்கிவிட வேண்டு மென்றும் பிரச்சோதனன் ஆணையிட்டான். அரண்மனைக் கூத்திலிருந்தும் அவளுக்கு விடுதலை கிடைத்தது.

இஃது இவ்வாறு இருக்கும்போது, வாசவதத்தையின் யாழ் வித்தகம், எழில் நலம் முதலியவற்றைக் கேள்வியுற்ற ஏனை நாட்டு அரசர் அவளை மணந்துகொள்ள மணத் தூதனுப்பினர். துது மேற்கொண்டு வந்த அவர்களிடம், பிரச்சோதன மன்னன் நடந்துகொண்ட முறை நாகரிகப் பண்பின் உச்ச நிலையில் அவனை நமக்குக் காட்டுகிறது. தூதர்கள் மூலம் பிற அரசர் அனுப்பிய திருமண ஓலைகளையும் செய்திகளையும் நுணுக்கமாக ஆராய்ந்தான். மரங்களில் ஏறித் திரியும் குரங்கு தன் குட்டியையும் பற்றிக்கொண்டு கிளைகளையும் விடாமல் ஏறுதல்போல வாசவதத்தையை இவர்களுக்குக் கொடுத்தல் தகுதியில்லை என்ற எண்ணத்தையும் உறுதியாகக் கொண்டான். அதே சமயத்தில் தூதர்களையும் விருப்பமாக நடத்தினான். அவர்கள் திருமண ஒலையைக் கண்டு நன்று நன்றென்று பாராட்டவுமில்லை. வெகுண்டு சீறவுமில்லை. நொதுமற் பாங்குடன் இருந்தான்.

மேலே கூறிய நிலையில் தூதுவர்களை வரவேற்று, இருக்கச் செய்து, சாதுரியமாகச் சில நாள்களில் திருப்பி அனுப்பிவிட்டான் பிரச்சோதனன். இவ்வாறு மணம் வேண்டி வேற்றரசர் தூதனுப்பிய செய்தியை வாசவதத்தையின் செவிலித்தாயாகிய சாங்கியத் தாய், அவள் கருத்தறிய அவளிடம் கூறினாள். தத்தை உதயணனிடம் அளப்பரிய காதல் கொண்டுள்ளாள் என்பதை வெளிப்படையாக அறிந்து கொள்ளவேண்டு மென்பதே சாங்கியத் தாயின் ஆவல். சாங்கியத் தாய் கூறியவற்றைக் கேட்ட தத்தை, இயக்கும்