பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/394

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

392

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

யும் கூறி, “இறந்துபோன அவனுக்குப் பிதிர்கடன்கள் யாவற்றையும் தாங்களே செய்திருப்பதனால் அவனுடைய உடைமையைத் தாங்களே இரு பகுதியாக்கிப் பிரித்து எடுத்துக்கொள்ளுவதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு” என்றனர். தாயோ புதல்வனை இழந்த பெருந்துயரத்தால், கண்ணிர் சிந்திப் பேதுற்று இருந்தனளே ஒழிய, அவர்களுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இறந்து போனவனின் உடைமை யாருக்கு உரியது என்பதை அறிந்து கொள்வதற்கே அந்த வாணிக சகோதரர்கள், உதயணனுடைய அவைக்களத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள்.

மேலே கூறப்பட்டவாறு வழக்கின் முழு விவரத்தையும் அவர்கள் வாய்மொழியாகவே உதயணன் அறிந்து கொண்ட பின்,உருமண்ணுவா அவர்களைச் சில கேள்விகள் கேட்டான்.

“இறந்து போனவனுக்கு மனைவி இருக்கின்றாள் அல்லவா?”

“ஆம், இருக்கின்றாள்!”

“இது பற்றி அவள் கருத்து என்ன?”

“இப்போது அவள் கருவுற்ற நிலையில் இருக்கின்றாள்” என்று அறிந்து வந்து கூறினர் அவர்கள்.

“கருவுற்றிருக்கும் அவளுக்கு ஆண் மகன் பிறந்தாலோ, உடமையைப் பற்றி நீங்கள் கனவிலும் உங்களுக்குரியதாக எண்ண முடியாது. பெண் குழந்தை பிறந்தால், உடமை உங்கள் இருவருக்குமே சரி சமாகப் பிரிக்கப்பட்டுச் சேரும். இக் காரணங்களால், அவள் பிள்ளைப்பேறு எய்துகின்ற வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்” என்று உருமண்ணுவா இந்த வழக்குக்குத் தீர்ப்புக் கூறினான்.

இந்த வழக்கிற்குத் தீர்ப்புக் கூறும்படி உருமண்ணுவாவை நியமித்திருந்தாலும், அவையில் இவ் வழக்கு நிகழும்போது தானும் அருகே இருந்தான் உதயணன். வழக்கு முடிந்தபோது உதயணனின் கண்கள் கலங்கியிருந்தன. ‘அவை கலையலாம்’ என்று கட்டளை பிறப்பித்துவிட்டுத்