பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/416

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ளாகிய கோமுகன், அரிசிகன், பூதி, தவந்தகன் முதலியவர்களும் இளமைப் பருவத்திற்குரிய தோற்றக் கணிவையும் பொலிவையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அடைந்து வந்தனர்.

கல்வி, அரசியல், படையியல் முதலிய கலைகள் தக்க ஆசிரியர்கள் மூலம் அவர்களுக்குக் கற்பிக்கப் பெற்று வந்தன. தோற்றத்திலும் உடலிலும் இளமையின் வனப்பு வளர்ந்து வந்ததைப் போலவே, கலை வனப்பை வளர்க்கும் கல்வித் துறைகளிலேயும் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தனர் அவர்கள். அரசகுமாரனாகிய நரவாண தத்தன், உதயணன் இளமையில் எந்த ஒரு கவர்ச்சி நிறைந்த அழகுடன் விளங்கினானோ, அதே அழகைப் பெற்றவனாக இப்போது விளங்கினான். அழகை அடிப்படையாகக் கொண்டு எழுகிற உணர்வின் மூலமாக நிகழும் காதல் என்ற கலைக்குத் தலைவன் மன்மதன், அந்த மன்மதனைப் போலவே நிகரற்ற அழகு நரவாண தத்தனிடம் அமைந்திருந்தது. இளமைக்கே உரிய பருவ உணர்ச்சிகளும் உள்ளக்கனிவும் தரவான தத்தனுடைய தோற்றத்தில் புலப்பட்டன. அவனது நடையில் பெருமிதம் செறிந்திருந்தது. முகத் தோற்றத்தில் இளமை என்ற அந்தப் பருவத்தின் தத்துவமே அழகு வடிவாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.

ஒருநாள் தான் படைப் பயிற்சிக்காகப் பழகிக் கொண்டிருந்த யானைமேல் ஏறி கோசாம்பி நகரத்திலுள்ள சில முக்கியமான வீதிகளின் வழியாகச் சென்று கொண்டிருந்தான் நரவாண தத்தன். அப்போது ‘கார்மேகக் கூட்டங்களின் திரண்ட கருமைக்கு மேலே எழுந்து காட்சியளிக்கும் முழு வெண்மதி போலத் தோற்றமளிக்கின்றான், யானை மேல் வீதிகளில் உலா வந்த நரவாணதத்தன்’ என்று கற்பனை செய்து உவமிக்கும்படியாக இருந்தது அவனது பவனி. பல தெருக்களைக் கடந்து அழகிலும் ஆடல்பாடலிலும் சிறந்த கணிகையர் வசிக்கும் கணிகையர் தெருவிற்குள் நுழைந்தது நரவாணனின் யானை, கணிகையர் தெருவிடையே அவன் யானைமேற் சென்றுகொண்டே இருக்கும்போது, திடு