பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/429

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணிய விளைவுகள்

427

நரவாணனையும் அப்படியே சிறைசெய்து கட்டி வலியப் பற்றி இழுத்துக்கொண்டு வான்வழியாக மேலே கிளம்பினான் மானசவேகன். அவர்களிருவரையும் சரியானபடி தண்டிக்க வேண்டும் என்பது அவன் ஆத்திரமுற்ற நெஞ்சத்தின் தீர்மானம். வானத்தின்மேல் சென்று கொண்டிருக்கும் போதே இடைவழியில், திடீரென்று நரவாணனைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டான். தனக்கு இன்பமளித்த தன் காதலனைத் தன் தமையன் இவ்வாறு தள்ளியதைக் கண்டு தன் மந்திர வலிமையால் அவன் யாதொரு துன்பமும் அடையாமல் உயிரோடு பூமியைச் சென்றடைவதற்கு ஏற்பாடு செய்தாள் வேகவதி.

வேகவதியினது ஏற்பாட்டின்படி நரவாணன் ஒரு துன்பமுமின்றி ஓர் ஆசிரமத்தில், காட்டுநதி ஒன்றின் கரைப் புறமாகப் பூமியில் வந்து இறங்கினான். அந்த ஆசிரமத்தில் உள்ள முனிவரைச் சந்தித்துத் தனக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறி, அவற்றைத் தவிர்க்க வழியும் கேட்கலாம் என்றெண்ணினான் நரவாண தத்தன். உதயணனுக்குத் தந்தையும் தனக்குத் தாத்தாவுமாகிய சதானிக முனிவருடைய ஆசிரமம்தான் அது என்றறிந்தபோது நரவாணனின் வியப்பு இன்னும் பன்மடங்காகப் பெருகிற்று.

81. புண்ணிய விளைவுகள்

தான் வானிலிருந்து கீழே இறங்கிய ஆற்றங்கரை யிலிருந்த ஆசிரமத்திலே அந்த முனிவரைச் சென்று வணங்கியபோது, அவரே தம்முடைய அறிவு வலிமையால் அவனை இன்னான் என்று இனந் தெரிந்துகொண்டு அவனுக்கு வாழ்த்தும் உறவும் கூறி விளக்கினார். தான் அந்த முனிவருக்குப் பேரன் முறையாக வேண்டும் என்பதை அறிந்து கொண்டபோது, நரவாணனுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டது. தான் எவ்வாறு விஞ்சையர் உலகு சென்று அவர்களை வெல்வது என்றும், மதனமஞ்சிகையை மீட்பது எங்ஙனம் என்றும் தனக்குப் பாட்டனார் முறை