பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாங்கியத் தாயின் கதை

41

 ஆற்றிற்குக்கொண்டு போயினர். ‘நடப்பதென்ன?’ என்றறியும் ஆவலினால் நீ என் செய்தியைக் கேள்விப்பட்டு ஒடோடியும் வந்து, என்னை மீண்டும் கரைக்குக் கொண்டு வரும்படி ஆணை தந்தாய். நின் ஆணைப்படி யான் கரைக்குக் கொண்டு வரப்பட்டேன். என்னை விரைவாகத் தோணியிலிருந்து இறக்கும்போது தோணி யோட்டும் புலையனுடைய துடுப்பு என் நெற்றியில் வடுப்படுத்திவிட்டது.... அந்த வடு இதோ இருக்கிறது” சாங்கியத் தாய் நெற்றியில் சுருண்டு படிந்திருந்த கூந்தலை விலக்கி வடுவைக் காட்டினாள். உதயணன் கூர்ந்து நோக்கினான். “யான் கரையில் இறக்கப் பட்டதும் நடந்த யாவற்றையும் விசாரித்தறிந்து கொண்ட நீ ‘இவள் செய்தது மன்னிக்க முடியாத குற்றமேயானாலும், ‘அதற்காக இவளுக்கு விதிக்கப்பட்ட இத் தண்டனை மிகுதியானது’ என்று உரைத்தாய். ஏற்ற தண்டனையொன்றை யுரைக்கும்படி அருகே நின்ற அறிஞர்களைக் கேட்டாய். பலர் பலவாறு கூறினர். ‘தாம் மேற்கொண்ட நெறியைப் பிழைத்தவர்கள், கைக்கொள்வதற்குரிய விரதமே இவளுக்கும் ஏற்ற தண்டனை’ என்று அணித்தே நின்ற ஒரு குறிக்கோளாளன் கூறினான். அது ஏற்றதாக நினக்குப் படாமையால் மீண்டும் கேட்டாய். அது கேட்டு உன் அருகே நின்ற கோசிகன் என்னும் சேனைக் கணிமகன், 'இளமையில் கணவனைப் பிரிந்தமை காரணமாக நெறிகடந்தொழுகிய இவள், தவத் துறையிற் செல்லுதற்குரியள். இவளைக் கொல்லுதல் பாவமாகும். தவநெறியில் சிலநாள் ஆழ்ந்திருந்து பின்னர் ஒரரசன் மேற்பார்வையில் அவன் அந்தப்புர மகளிர்க்கு அறநெறி புகட்டும் முதுமகளாக இவள் ஆவாள்’ என்று கூறினான். அதுவே நினக்கும் பொருந்திய நெறியாகப் புலப்பட்டது. என்னை அவ்வாறே செய்யுமாறு கூறி அக் கொடுமையிலிருந்து விடுத்தாய்” என்று சொல்லி நிறுத்தினாள் சாங்கியத் தாய். உதயணன் அவள் வாழ்விலே அதற்குப் பின்பு நடந்த நிகழ்ச்சிகளையும் தான் அறிய வேண்டுமென்று கூறவே, அவள் மேலும் கூறுவாளாயினள்: “அங்கிருந்து சென்று கங்கைக்கரையை அடைந்த யான் வைர