பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உவகைத் திருவிழா

49

நளகிரி மதங்கொள்ளச் செய்வேன். அதனால் நகரினையும் பல மக்களையும் அழியச் செய்வேன். நினைவிருக்கட்டும். நீராட்டு விழாவை மறந்து விடாதீர்கள்” என்று கூறிக் கொண்டே பாகீரதி உஞ்சை நகரத்துத் தெருக்களில் சென்றாள். தோள்வரை தொங்கும் அவள் காதணிகளையும் விரித்த கருங்குழலையும் வீசி நடக்கும் கரங்களையும் இடி போன்ற பேச்சுக் குரலையும் கண்டு நகர மக்கள் அவளைத் தெய்மென்றே நம்பினர். அந்த நம்பிக்கையால் ‘மீண்டும் நளகிரியின் அழிப்பு வேலை ஆரம்பமாகி விடுமோ?’ என்ற அச்சமும் எழுந்தது. நளகிரியை நினைக்கும்போதே நடுங்கினர் மக்கள். கரிய நிறமுள்ள கொழுத்த பன்றியால் முன்பு எப்போதோ துரத்தப் பெற்ற நாய், பின்பு கரியேறிய சோற்றுப்பானையைக் கண்டதும், ‘இது அந்தப் பன்றி தானோ!’ என்று எண்ணி ஒடுவதுபோல ஏற்கெனவே நளகிரியால் துன்பமுற்றிருந்த மக்களுக்குப் பாகீரதி கூற்று முழுதும் அதே அச்சத்தை உண்டாக்கியது. நகரின் பெரிய மனிதர்கள் நாடு காவலனைத் தேடி ஓடினர். தெய்வ ஆவேசத்தில் கேட்ட செய்தியைப் பரபரப்புடன் கூறினர். அரசன் சிந்தித்துப் பார்த்தான். நீர்விழாவிற்கு உடன்பாடு தந்தான்.

11. உவகைத் திருவிழா

ரசன் உடன்பாடு பெற்றபின் சேனாபதி நீராட்டு விழாவிற்குரிய நாளைக் குறிப்பிட வேண்டியவனானான். மறுநாள் நீராட்டுக்கு ஏற்றதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. முரசெறி வள்ளுவன் நகர் முழுதும் நாளை நீராட்டு விழா நிகழுமென்பதை அறிவித்தான். நகர் முழுவதும் ஒரே ஆரவாரமயம். விடிந்தால் நீராடல் திருவிழா. விறுவிறுப்புக்குக் கேட்கவா வேண்டும்? ஊர்திகளை ஏற்பாடு செய்வதில் சிலர் ஈடுபட்டனர். ஆடல் விழாவிற்கு வேண்டிய அலங்காரப் பொருள்களைச் சேகரிப்பது பலருடைய வேலை யாயிற்று. இளமகளிர் வளைக்கரம் இசை முழங்க, வாசனைச்

வெ.மு- 4