பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைநகர் தீப்பற்றியது

53

 யானால் நின்னைத்தொட்டு விடுவேன்’ என்று மிரட்டினான் ஒரு குடியன். எட்டி குமரன், ஒருவன் இன்னிசை வீணை வாசித்தான். மயிலொன்று தோகை விரித்தாடியது. அறச் சாலைகளில் அந்தணர் உண்டி நுகர்ந்தும் துகர்வித்தும் அறநெறி பேணினர். மகளிர் குரவையொலி ஒருபுறம் இனிமை செய்தது. தன் மெல்லிய வெண்பட்டாடையை நீரிற் பறி கொடுத்த பெண்ணொருத்தி, துரையை ஆடையென்று கையால் அரித்து அஃது ஆடையின்மையின் வெட்கித் தலை குனிந்தாள். கள்குடியன் ஒருவனும் அவன் காதலியும் ஒருபுறம் ஊடல் நாடகம் நடத்தி ஊர் சிரிக்கச் செய்து கொண்டிருந்தனர். சேனை வாணிகன் மகள் அணிந்திருந்த பொன்னரி மாலை நீரோடு போயிற்று. அதை அவளருகில் நீராடிக் கொண்டிருந்த மைத்துன முறைமையனான மன்னன் கைப்பற்றி, அவளை மெல்லத் தழுவி அம்மாலையை எடுத்துக் கொணர்ந்து அணியத் தலைப்பட்டான். அவள் நாணி விலகினள். அது கண்டு அவன் ‘நீ விலகினால் மாலையைத் தொலைத்த செய்தியை எல்லோரிடமும் கூறி விடுவேன்’ என்று பயமுறுத்தி அவளை இசையச் செய்தான். இவ்வாறு பல்வகை இன்ப நிகழ்ச்சிகளுடன் நீராட்டு விழா இனிது நடந்து கொண்டிருந்தது. தோணியேறி நதியினிடையே சென்று நகர நம்பியரும் நங்கையரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து விழாவிற்கு ஒரு தனி அழகைக் கொடுத்தனர். பேதை முதல் பேரிளம் பெண்டிர் ஈறாக எழுபருவ மகளிரும் நீராட்டின்பந் திளைத்தனர். இதழ்கள் சூழ்ந்த அல்லிக் கொட்டைபோல ஆயமகளிர் புடைசூழத் தத்தை நீராடத் துறைசேர்ந்தாள். அவளுடைய நீராடல் தொடங்கிற்று.

12. தலைநகர் தீப்பற்றியது

வாசவதத்தையின் நீராடல் முடிந்தபிறகு செவிலியர் முதலியோர் அவளை அலங்கரித்தனர். இதற்கிடையில் உதயணன், பத்திராபதியின் மேலேறித் தத்தை இருந்த துறைக்கும் பக்கத்தில் வந்து சேர்ந்தான். சூர் தடிந்த பிறகு