146 வெற்றி மேல் வெற்றி பெற...
அப்போது, சொற்களாலே விளக்க முடியாத அந்த முன்று பெயர்களின் புகழை அறிவீர்கள்.
நால்வரின் அறக்கட்டளையை நீங்கள் அறிந்து உணர் வீர்கள்.
உங்களிலே இன்பமும் நட்பமைதியும் நிரம்பும். அறக் கட்டளையை அறிவதற்கு; அதனைப் பணிவதற்கு; அதனைப் பயிற்சி செய்து நடைமுறைப் படுத்துவதற்கு, ஒன்றே ஒன்று, அதுவே தீர்வு, பாதுகாப்பு. அது ஒன்றே தவறிலிருந்தும் ஆறுதல் இன்மையினின் றும் விடுதலை பெறுவது.
நல்லவரின் அறக்கட்டளை உயர்வு மிக்கதும், புகழ் மிக்கதும் ஆகும்;
எந்தப்பயணியின் பாதம் அறக்கட்டளைக்குப்பணிவாக நடக்கிறதோ, அவனே மிக உயர்வான பேறுபெறுபவன்.
அறக்கட்டளையின் அறிவே உயர்வுமிக்க அமைதியை அளிப்பது;
எவன்- தென்னலத்தில் இனிமேல் பற்றுக் கொள்ள மாட்டேன்
சண்டை சச்சரவுகளில் இனிமேல் ஈடுபட மாட்டேன். இனிமேல் பழி வாங்க மாட்டேன். மதிப்பீடு செய்து இனிமேல் குற்றம் காண மாட்டேன். இதுவரை, தன்னலத்தைப் பற்றியிருந்தேன். தன்னலத்தை நிறைவு செய்ய முயன்றேன்; என்னையே பாதுகாக்கவும் எனக்காக எதிர்க்கவும் செய்தேன்.
ஆனால், இப்போது நான் தன்னலத்தை விட்டு விட்டேன்.
எனக்காக எதிர்க்காமல் சகம் செய்வேன்.