பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 147

ஆம்! அது மிகக்கூடிய துன்புறுத்தல், எனதாகவே. இருக்கும்.

நான், எல்லா மாந்தர்களையும் விரும்புவேன், என்னை மட்டுமே நான் வெறுப்பேன்.

பணிவெனும் ஆடையால் என்னைப் போர்த்திக் கொள்வேன்

நேர்மையும் அன்பும் என்னைப் பாதுகாப்பவை ஆகும். மிக உயர்வானவரையே நான் புகலடைவேன். நல்எண்ணம் எனது வழிகாட்டியாகும். கருணை என்னைவிட்டு அகலாது. உண்மையின் புனிதமான அன்பு, என் எண்ணங்: களுக்கும் செயல்களுக்கும் வழிகாட்டும்.

இவ்வாறாக, நான் பாவங்களிலிருந்து விடுபடுவேன். உயர்வுமிக்க நல்லதை நடைமுறைப்படுத்துவேன்.” இவ்விதம் எவன் உறுதி கொள்கிறானோ, அவனே அறக்கட்டளையை அறிவான்.

நல்லவரின் அறக்கட்டளை அறிந்து உணரப்படும். அதன் மேன்மையின் நிறைவு அவனுக்கு வெளிப்படும்: அத்துடன், எல்லாத் தீங்குகளிலிருந்தும் காப்பாற்றப் படுவான்.

ஆகவே, நல்லவரின் மாந்தன் நம்பிக்கை வைக்கட்டும். நல்லவரைப் பற்றிக் கொள்ளட்டும். நல்லவரைப் பின் பற்றட்டும். அவ்வாறே அவன் தன்னைப் பற்றி அறிந்து கொள். வான்.

தன்னைப் பற்றி அறிவதனால் இந்தப் புவியையே அறிந்துணர்வான்.

அப்பொழுது அவன் அமைதியை அடைவான்.