பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வெற்றி மேல் வெற்றி பெற.

உண்மை வெளிப்படுத்தப்பட்டது, அதனால் தவறு மறைந்து விட்டது;

எவன் தன்னலனை விட்டுவிடுவதென உறுதி கொள் கிறானோ அவன் போற்றுதற்கு உரியவன்;

எவன் தூய்மையுடன் இருக்கிறானோ, அவன் புனித மானவன்;

எனது தனது எனும் எல்லாவிதமான பொய்த்தோற்றங் களையும் அழிக்கின்றானோ அவனே புனிதமானவன்;

கடைசியில் அவன் பெருமை மிக்க மெய்ப்பொருளைக் கண்டு கொள்கிறான்.

அந்த ஆசான் திரும்பவும் வெளிப்படுத்தப்படுகிறார், அதனால், இப் புடவி பேரின்பம் அடைகிறது;

நல்லவரின் அறக்கட்டளை மீண்டும் விளக்கப்பட்ட தனால், இப் புடவி மகிழ்ச்சி அடைகிறது.

அந்தப் பெருமை மிக்க மெய்ப்பொருள் மனத்தால் பற்றிக் கொள்ளப்படுகிறது, அதனால் இப் புடவி மகிழ்ச்சி அடைகிறது.

பேருரை

உண்மையின் வழி

1. தன்னடக்கம்

உண்மை என்பது என்ன?

நிறைவான செயல்பாடுகளின் அமைதியில் அது குடி கொள்கிறது.

அந்த அமைதி அறிவிலிகளுக்குப் போதுமானது.