பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 157

இந்த மூன்றும் மற்றைய எல்லாவற்றையும் உள் அடக்குகின்றன.

தன்னை அடக்குவதில் பயிற்சி செய்ய மறுப்பவன்எவன் தன் நெஞ்சத்தினால்

  • நான் உண்பேன், அருந்துவேன், அத்துடன் இன்பத்தின் மாலைகளை அணிந்து கொள்வேன்’

என்று கூறுகறானோ, அவனால் அமைதிக்கு அழைத்துச் செல்லும வழியைக் கண்டுகொள்ள முடியாது.

ஆனால் எவன் தனக்குள்ளேயே

எவற்றிலிருந்து விடுபட வேண்டுமோ அவற்றை

ஒழிப்பதில் ஈடுபடுவேன், அப்போது தூய்மையுடன் செயல் படுவேன்

நாணயமே எனது நண்பன்,

நம்பிக்கை, எனது இருளுக்கு ஒளியூட்டும், ஆம்! சீரிய பண்பே எனக்குப் புகலாகவும்

எனது தங்குமிடமாகவும் அமையும்’

என்று கூறிக் கொள்கிறானோ அவன் உண்மைக்குச் செல்லும் வழியைக் கண்டு கொள்வான்,

ஓ! அவன் ஏற்கெனவே கண்டுவிட்டான்,

ஏனெனில், சீரிய பண்பின் பயிற்சியே அந்த வழியின் நுழை வாயில்.

பண்பிலி அழிக்கின்றான், பண்புடையவன் தட்டி எழுப்புகின்றான்;

தனது இன்பத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருப்பவன்,