பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவுேந்தன் 168

எவன் தனக்கென்று எதையும் வைத்திருப்பது. இல்லையோ,

எவன் தன்னுடையதென்று எதையும் சொல்லாமல் விடுகிறானோ;

எவன், தனது உள்ளத்தை உலகியல் பொருள்களில் ஈடுபடுத்த மறுக்கின்றானோ,

தனது எல்லாவிதமான பேராசைகளையும் ஒரு பக்கத்தே ஒதுக்கிவிட்டுத் தன்னில் உள்ள தற்செருக்குகளை யெல்லாம் வெறிதாக்கி,

எவன் தன்னுடைய எல்லா கோட்பாடுகளிலிருந்தும் கருத்துகளிலிருந்தும் விடுபடுகிறானோ,

அவன் தனக்கென்று எதுவுமே இல்லாது, மறைவற்று வெறுமையாகின்றான்.

அப்படி வெறுமையானதும் அவனில் உண்மை நிறை கிறது

மறைவற்ற நிலை எய்தியதும் நேர்மையால் போர்த்திக் கொள்ளப்படுகின்றான்.

ஒன்றுமே இல்லாதவன் எல்லாவற்றிற்கும் தலைவனா கிறான்.

தன்னைப் புகலடைய வைப்பதில், முழுமையாகவே பயிற்சி எடுக்கும்போது அதிக உயர்வானதை அடைகிறா ன்

அப்போது, உண்மை அறிந்துணரப்படுகிறது. நிறை வான அமைதி நுகரப்படுகிறது.

தன்னைத்தான்ே புகலடைந்தவனை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது.

இந்த உலகை வெற்றி கொண்டவனை ஒரு போதும். குழப்ப முடியாது.