பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 167

முடிவில்லாத மகிழ்ச்சியை அறிகின்றான்,

பெருமைமிக்க நட்பமைதியைக் காண்கின்றான்.

கீழே உள்ளவர்களுக்குத் தலைவணங்கியதால் அவன் உயர்வுமிக்க நிலைக்கு உயர்த்தப் படுகிறான்.

தீவினையை வெற்றி கொண்டதனால் புனிதமான பொன் முடி அணிகின்றான்.

தன்னலத்தை மீள முடியாதவாறு ஓரிடத்திலேயே அறந்து விட்டதனால், அவன் உண்மையினால் புகழப்படு கின்றான்.

ஒன்றுமில்லாதவனாக விரும்பி, அவன் எல்லாமே பெறறவனாகிறான்.

தன்னிடமுள்ள எல்லாவற்றையும் அழிப்பதனால் எல்லாவற்றிற்கும் உடைமையாளியாகின்றான்.

தனது வாழ்வைக் கொடுப்பதனால், அழியாமையினால் தழுவப் படுகின்றான்.

எல்லா வகையிலும் ஒடுக்கமாகி, அவன் எல்லாவகை யிலும் மகிழ்ச்சி பெறுகிறான்.

எல்லா வகையாலும் நேர்மையாகி, எல்லாவற்றாலும் வாழ்த்தப்படுகிறான்.

எல்லாவற்றிலும் தூய்மையாகி, அவன் எல்லா வற்றிலும் அமைதியடைகின்றான்.

பணிவில் அழகு,

அன்பின் மேன்மை,

கள்ளமற்ற தன்மையில் வெல்ல முடியாமை,

சொற்களினால் விளக்க முடியாததை அவன் வெளிக் கொணர்வான்.