பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 88

விடுதலை பற்றி அறிந்திராதவனே தான்் கட்டுண்டு கிடக்கும் விலங்கை விரும்புவான்;

எவன் ஒளியைக் காணாமல் இருக்கிறானோ அவன் மீண்டும் இருளிலே கிடக்க விரும்புவான்.

விடுதலை பற்றி அறிந்ததும, அது அவனால் விரும்பப் படும்.

அந்த ஒளியைக் கண்டு உணரும்போது, அதன் பின்னர், இருளிலே வாழ இடம் இருக்காது.

தசையின் மேலுள்ள இச்சைகள், தொல்லைப் படுத்தும் காய்ச்சல் போன்றது;

மனத்தில் ஏறபடும் வெறுபபுகள், போராட்டங்கள்அனைத்தும் பொசுக்கும் தீ:

ஆனால் அந்தக் காய்ச்சலுக்கு மருந்தும் தீயின் வேட்கையைத் தீர்ப்பதற்கு நீரும் உள்ளன.

உண்மையே மனத்திற்கு நலம் அளிக்கும் மருந்து;

துன்புற்றவர்களுக்கு அதுவே இன் மருந்து;

வேட்கையினால் அவதிப்படுபவர்களுக்கு அதுவே ஒரு மடக்கு குளிர்ந்த நீர்.

உண்மையில் ஆறுதல் இன்மைக்கு இடமில்லை.

மீட்கப்படாதவர்கள் துன்ப வழியில் உள்ளனர்;

வேதனையும் களைப்புமே அவர்களின் கூட்டாளிகள்:

இன்பங்களை அடைந்த பின்னர் துன்பங்களைப் பற்றிக் கொள்கின்றனர்;

தன்னலத்திற்காக ஆவலுடன் பாடுபடும்போது, மகிழ்ச்சி அவர்களைவிட்டு மறைகிறது.