பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 莎莎

தேடுவதும் காண்பதும்

மாணவன் : அறிவு எங்கே உள்ளது?

உண்மை எங்கே?

அமைதி வாங்கே?

நான் துயருற்று இருக்கிறேன், அதற்கு மனிதர்களி னால் எவ்வித ஆறுதலையும் பெற முடிவதில்லை;

நான் வழி தவறிவிட்டேன்; மனிதர்களின் அறிவுரை களினால் என் மனத்திற்கு உறுதியைப்பெற முடியவில்லை;

ஆம்! என்ணில்கூட நான் உண்மையைக் காணவில்லை

எனது ஐயங்களுக்கும் துன்பங்களுக்கும் தீர்வு இல்லை.

என் நெஞ்சத்தின் இறுமாப்புடன் நான் போராடிக் கொண்டிருந்தேன்;

எனது கருத்துகளினால் மனிதர்கள் மனநிறைவைப் பெற்றுள்ளனர்.

நல்லவற்றிற்குப் பதிலாக தீயவற்றைத் தவறுதலாகக் கொண்டு விட்டேன்; -

அறிவிற்குப் மாற்றாக அறியாமையை அடைந்து விட்டேன்;

அதனால், இப்போது நான் தனிமையில் உள்ளேன், என் குரலைக் கேட்பதற்கு யாருமில்லை;

தான்் அழுதாலும் என் குரலைக் கேட்டு வர யாருமே இல்லை.

ஆசர்ன்: அப்படியில்லை, உன்னுடன் நான் இருக் கிறேன். உன் குரலைக் கேட்கிறேன். உன்னைக் காப் பாற்ற உறுதி அளிக்கிறேன்.