பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. பாரத தேவியின் பாத தரிசனம் ஆண்டவன் அடியார்கள் அல்லும் பகலும் அனவரத மும் ஆவலுடன் தேடி அலைவது பரமாத்மாவின் பாதாரவிந்தங்களைக் கண்டு களிப்பதற்கே. முடி யைக் காண ஒரு பொழுதும் முயல்வதில்லை. பக்த கோடிகளுக்குப் பாத தரிசனமே, அந்தமில்லாத, இன்பமான, அழிவில் வீடு அளிக்கும் என்பது பெரி யோர் துணிபு. மக்கள் மனக் கவலை மாற்றும் மார்க் கம் தனக்குவமை இல்லாதான் காள் சேர்தல் ஒன்றே என்று தெய்வப் புலமைத் திருவள்ளுவ தேவர் உறுதி கூறுகிறர். அப்படியால்ை துன்ப நிவாரணம் அருளும் துணேயடிகள் காண்பது எங்கே? இறைவன் இணே யடிகள் இருக்கும் இடம் எது? வேத சாஸ்திரங்கள், தர்ம நூல்கள், புராண இதிகாசங்கள் பரமன் பத மலர்களின் மணங் கமழும் இடத்தைப் பற்றிப் ᏞJöy பல வர்ணனைகள் கூறுகின்றன. தேடிக் கண்டு கொண்டேன் என்று சந்தோஷத்தோடும் தைரி யத்தோடும் அப்பர் ஸ்வாமிகள் பாடுகிருர் ஆல்ை, எங்கே கண்டுகொண்டதாகக் கூறுகிருரோ அங்கே காண்பது அறிஞர்க்கு மட்டுமே இயலும். 98