பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு P அளவிடஇயலாது. அது வெகு அற்புதமானது வெகு அழகானது. சாதாரணக் கார்களைப் போல மனிதல்ை உண்டாக்கப்பட்ட தன்று. தெய்விக சக்தியால் சிருஷ்டிக்கப்பட்டதாகும். அதைப்பற்றி ஆராய்ந்த அறிஞர் அது கிர்மாணிக்கப்பட்ட தொழிற்சாலை சூரிய மண்டலத்தின் அருகில் இருந்த தாகக் கூறுகின்றனர். இதில் அறிஞர்க்குள் அபிப் பிராய பேதம் இல்லை. ஆனல் அந்தத் தொழிற் சாலையில் அது செய்யப்பட்ட முறையைக் குறித்து ஏகமனதான அபிப்பிராயம் இல்லை. இந்த அறிஞர் போற்றும் அற்புதக் காரைப் போல் அவனியில் வேறு உண்டோ ? அகில லோகங்களிலும் அலேந்து தேடினலும் இது போன்ற வேறு காரைக் காண முடியவே முடியாது. இப்படிப்பட்ட கார் இது ஒன்றுதான் உண்டாக் கப்பட்டது. இதை உண்டாக்கி எத்தனையோ லட் , சம் வருடங்கள் கடந்துவிட்டன. ஆனல் கார் மட் டும் இப்பொழுதும் புத்தம் புதிதாய் இருக்கின்றது. இடையில் அதன் உறுப்புக்களைப் பிரித்துப் பழுது பார்த்து மீண்டும் ஒன்று சேர்க்கவில்லை. அதை ஆக்கிய காலத்திலேயே பழுது பார்த்தல் அனுவகி யம் என்று நிச்சயிக்கப்பட்டுவிட்டது. பழமையும் புதுமையும் ஆகிய இந்தக் கார் நான் கேற்ருே முன்தினமோ வாங்கியதன்று. நான் பிறந்த அன்றே என்னிடம் இருக்கிறது. 14