பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்குரி களில் சில மீன் உருவம், சில படகு உருவம், சில வேறு உருவம் கொண்டிருக்கும். என்னுடைய கார் ஆரஞ்சுப் பழத்தின் உருவம் என்று நிபுணர் கள் கூறுகின்றனர். சாதாரணமாகக் கார்கள் நாள் செல்லச செல்ல அழகு குன்றும், தேய்வுறும், கெட்டு விடும். திரைகள் கிழிந்துபோகும், விரிப்புகள் நிறம் மங்கும், கண்ணுடிகள் கீறிவிடும், விசை வேலை செய்யாது, கதவுகள் கிரீச்” என்று பாடத் தொடங்கும். ஆனல் எனது கார் விஷயமோ அப் படி யன்று. வருஷங்கள் செல்லச் செல்ல வனப்பு மிகுந்துவருகின்றது. கார் செய்யப்பட்ட காலத்தில் காணப்பட்ட அற்புதங்கள் வேறு, இப்பொழுது காணப்படும் அற்புதங்கள் வேறு. எப்பொழுதும் அற்புதம்தான். எனது காரில் கண்டு களிக்க இனிய காட்சிகள் மன ரம்மியமான இனிய இசை, ஸ்நானம் செய்யவும் தாகம் தீர்க்கவும் தெளிந்த சுத்தமான ஜலம்இவை யெல்லாம் உண்டு. மேலும் என்ைேடு பேசிப் பழகி ஆனந்தமாய்க் காலங் கழிக்க அநேக கோடி நண்பர்களும் உண்டு. அந்த நண்பர்கள் எனக்கு நாள்தோறும் காட்டும் அற்புத விநோதங் கள் பல. உண்ணத் தேவையானவை. அனுபவிக் கத் தேவையானவை எல்லாம் அங்கே அபரிமித மாய்க் கிடைக்கும். 16