பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது தோழன் செய்த மான்ஷியர் க்யூ என்னும் பிரெஞ்சுப் பெரியாா எங்கள் இருவர்க்குமுள்ள இணை பிரியா நட்பை நன்கு உணர்ந்திருந்தார் என்று தோன்றுகிறது. அதல்ைதான் அவர், ! உன் தோழன் சுகமா யிருங் தால் நீ சந்தோஷமா யிருப்பாய் என்பது மட்டு மன்று; நீ சந்தோஷமாயிருந்தால் உன் தோழனும் சுகமாய் இருப்பான் என்பதும் உண்மையாகும் என்று கூறுகிரு.ர். என் தோழன் சுகவீனமுற்ருல் கான் அவனைக் குணப்படுத்தச் செய்யவேண்டியது என்ன ? அவன் மருந்துண்ணலாம். ஆனல் அது மட்டும் போதாது. நானும் உதவி செய்தல் அவசியம். கான் கவலை விட்டு, சோர்வு நீத்து, பயம் ஒழித்து, சந்தோஷமாய் இருக்கவேண்டும். என் ஆனந்தம் அவன் ஆரோக் கிய சாதனம். இப்பொழுது நவீன வைத்திய ஆராய்ச்சியாள ரும் எங்கள் ஐக்கியத்தை விளக்க ஆரம்பித்து விட் டார். என் தோழனிடம் கிளான்ட் என்று ஆங்கி லத்தில் அழைக்கப்படும் சில சிறு உறுப்புக்கள் உளவாம். அவைகள் ஆரோக்கியமா யிருந்தால் நான் அறிவுடையவனுய் அற வழியில் நிற்பவன யிருப்பேனம்; அவை கேடுற்ருல் என் ஆரோக்கியம், அறிவு, ஆற்றல் அனைத்தும் அழிந்துவிடுமாம். ஆகவே எப்படிப் பார்த்தாலும் நாங்கள் தோழர் ஐளே. மற்றவர்களே நண்பர்கள் என்று உரைத்துக் 29.