பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது? அங்ங்ணம் நடைபெற்ற காலத்தில், ஒரு நாள், அரச சபையில் அரசர் பெருமானும், அவருடைய பெருமாட்டியும், பிரபுக்களும், பிரபுக்கள் மனைவி யரும் بيت وتنقه ஆடல் பாடல்களில் ஆழ்ந் திருந்தனர். அப்பொழுது திடீரென்று ஒரு கூடக் குரல் - காதைப் பிளக்கும் அழுகைத் தொனி - கேட்டது. ஐயோ முறையோ ? அநீதியை ஒழிக்க அரசர் இல்லையோ? என் கணவரை மீட்டுக்கொடுக்க மன்னர் இல்லையோ? என்று கதறி அழுதுகொண்டு ஒரு பெண் அரச சபா மண்டபத்திற்குள் நுழைங் தாள். மன்னர் விஷயத்தை விசாரித்தார். நானும் என் கணவரும் ஓர் ஊருக்குப் போய்க்கொண்டிருந்தோம். வழியில் ஒரு கோட்டை யிலிருந்து ஒரு முரடன் வந்து என் கணவரை இழுத் துப் போனன். நான் அழுது இரங்கினேன். ஆனல் அந்தப் பாதகன் மனம் இளகவில்லை. ' ஏழைகளைக் காக்கிருராமே ஆர்தர் இறைவர், அவரிடம் போய்ச் சொல். உன் கணவனே மீட்க முடியுமால்ை மீட்கட் டும் 1 என்று கூறி, என்னை வெளியே தள்ளிக் கத வைத் தாழிட்டுவிட்டான். ஐயோ, எம்பெருமானே ! எனக்கு அருள் செய்ய மாட்டீரா ? என்று விம்மி விம்மி அழுதுகொண்டே அந்தப் பெண் கூறிள்ை. அரசர் மனத்தில் பெண்ணின் துயரம் கண்டு வருத்தமும், அக்கிரமச் செயல் கண்டு கோபமும் பொங்கி எழுந்தன. அந்தப் பெண்ணிடம், அம்மா 65